சொப்புகள்

அங்கிருப்பதை  இங்கும்
இங்கிருப்பதை அங்கும்

மாற்றி மாற்றி
வைத்துப் பார்க்கிறாள்

தன்
மனக்கதைகள்
வெளிப்படும் வரை

இதுவும்
அதுவும்
எல்லாமும்

அவள் கை
சொப்புகள்


விரும்பும்வரை
விரும்பியபடியெல்லாம்
வைத்து விளையாடுவாள்

தனக்கே
தனக்காக
தான் சமைத்திருக்கும்
தன் உலகில்