ஆரஞ்சு நிறப் பூவிதழ்

ஆரஞ்சு  நிறப்  பூவிதழ்
போல்
அத்தனை அழகு
விரல் வைத்துப் பார்த்தேன்

எத்தனை மென்மை
உணக்கையாயிருந்தது

சுரீரென்று சுட
வெடுக்கென்று
எடுத்துக் கொண்டேன்

கொப்புளம் கட்டி விட்டது
பின் உடைதல்

கடும் எரிச்சல்
வலி
கண்ணீர்

மெல்ல மெல்ல ஆற
வடு மட்டும்
இப்போது

சுட்ட நினைவு
மக்க

தழலென எழுந்தாடும்
எரிக்கென

மீண்டும் விரியும்
இக்கண்களை
இப்போது
என்னவென்று சொல்ல