உன் முற்றத்தில்..

கனிந்தவன்
நிறைந்தவன்
அன்பன்றி  மற்றொன்றறியாதவன்
குழந்தையவன்

நொடியில் மகிழ்ந்தான்
நீயென்றே  கரைந்தான்

ஏமாளி
கவைக்குதவாதவன்
பித்தன்

நீயும்
இரக்கம்  கொள்
சீர்  படுத்து

இறைவன்  
இறங்கி  வந்தான்
உன்  வீட்டிற்கு

இத்தனைக்குப்  பிறகும்
இள  மழையை
விட்டுச்  செல்வான்
உன்  முற்றத்தில்