
மூச்சுப் பிடித்து தாவித் தவழ்ந்து விடாது ஏறி உச்சியை அடைந்தாகி விட்டது இப்போது அனைத்தும் என் கால்களின் கீழே மேகமும் கூட ஆளைத் தூக்கும் காற்று எழும்ப விட்டால் பறந்து விட முடியும் திசையெங்கும் அமைதி 'பம்'மென்று.. தனியாய் நான் என்ன செய்ய இனி கீழிறங்க வேண்டியது தான் மற்றொரு உச்சத்திற்காக