சுகமாய்

தலையிலும்
முகத்திலும்

கை  கால்களிலும்

ஒட்டியிருக்கின்றன
மணற்  பரல்கள்

காயக்  காய
ஒவ்வொன்றாய்
மெல்ல
உதிர்ந்து  விழும்

விடாப்பிடியான
ஒன்றிரண்டையும்

தட்டித்  தட்டி  விட்டு

கால்களையும்
கழுவிக்  கொண்ட  பின்

இனி
சுகமாய்
உள்  நுழைதல்  தான்