குறுந்திட்டு

மாமலையென
நடந்து  வந்தது
ஒரு
தாட்டான்

அருகில்
அவன்
மாது

அவள்  கண்  நோக்க
அவர்  தலை  தாழ்த்தினர்
அவன்  கண்  வளைக்காய்

குட்டி  ஒன்று
குட்டிக்கரணமடித்தது
அவன்  புன்னகைக்காய்

ஆடியது
பாடியது
இளித்தது
ஒவ்வொன்றும்

பின்னாலேயே
வந்து  கொண்டிருந்த  
ஒன்று
கொஞ்சம்
பின்  தங்கிப்  பார்த்தது

ஹோவென்ற
பெருங்காட்டின்
பேரோசையால்
மீண்டும்
ஓடி  வந்து
ஒட்டிக் கொண்டது

கட்டி  அணைத்த  படியும்
பின்
எட்டி  உதைத்த  படியும்

ஏதோ
ஒன்றைச்
செய்த  படி

படைசூழ
வலம்  வந்தான்
ஆழி  சூழ்
அக்குறுந்திட்டில்