
இத்தனைப் பெரிய உலகிலிருந்து சிறு சிறு குச்சிகளாய் காய்ந்த சருகுகளாய் மென்னிறகுகளாய் கொஞ்சமாய் பொறுக்கிக் கொள்கிறேன் கண்ணெட்டா உயரத்திலோ கனத்த அடர்விலோ துருத்திக் கொண்டிருக்காததாய் கண் உறுத்தாததாய் முக்கியமில்லாததாய் முற்றிலும் இயைந்ததாய் சின்னஞ் சிறியதாய் எனக்கும் என் முட்டைகளுக்குமாய் ஓர் உலகை சமைக்க