பகவத் கீதை-அத்தியாயம் 2- சாங்க்ய யோகம்(26-50)

अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् |
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि || 26||

atha chainaṁ nitya-jātaṁ nityaṁ vā manyase mṛitam
tathāpi tvaṁ mahā-bāho naivaṁ śhochitum arhasi

இந்த ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது, மரணிக்கிறது என்று நீ நினைத்தால், பெரும் தோள்களைக் கொண்டவனே, அப்பொழுது கூட நீ துக்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च |
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि || 27||

jātasya hi dhruvo mṛityur dhruvaṁ janma mṛitasya cha
tasmād aparihārye ’rthe na tvaṁ śhochitum arhasi

பிறப்பவனுக்கு இறப்பு நிச்சயமானது போல், இறந்தவனுக்கு பிறப்பும் நிச்சயமானது. அதனால் பரிகாரமற்ற இந்த நிலைக்கு, நீ வருத்தப்பட ஒன்றுமில்லை.

अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत |
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना || 28|

avyaktādīni bhūtāni vyakta-madhyāni bhārata
avyakta-nidhanānyeva tatra kā paridevanā

படைப்புகள் அனைத்தும் ஆதியில், பிறப்பிற்கு முன்பு, புலப்படாமல் இருந்தன; மத்தியில் புலப்பட்டன; இறந்தபின் மீண்டும் புலப்படாதாயின; இதில் வேதனை கொள்ள என்ன இருக்கிறது.

आश्चर्यवत्पश्यति कश्चिदेन
माश्चर्यवद्वदति तथैव चान्य: |
आश्चर्यवच्चैनमन्य: शृ्णोति
श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् || 29
āśhcharya-vat paśhyati kaśhchid enam
āśhcharya-vad vadati tathaiva chānyaḥ
āśhcharya-vach chainam anyaḥ śhṛiṇoti
śhrutvāpyenaṁ veda na chaiva kaśhchit

ஒருவர் இதை 'ஆச்சரியம்' என்பதாய் பார்க்கிறார்; ஒருவர் இதைப் பற்றி 'ஆச்சரியம்' என்று பேசுகிறார்; அதே போல் மற்றொருவர் இதைப் பற்றி 'ஆச்சரியம்' என்று கேள்விப் படுகிறார். எல்லாவற்றையும் கேட்ட பிறகும் மற்றொருவர் இதை அறிவதில்லை.

देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत |
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि || 30||

dehī nityam avadhyo ’yaṁ dehe sarvasya bhārata
tasmāt sarvāṇi bhūtāni na tvaṁ śhochitum arhasi

எல்லாருடைய தேகத்திலும் இருக்கும் இந்த தேஹியானது நித்தியமானது, அழிவற்றது; அதனால் பரதனே, நீ எல்லா ஜீவராசிகளுக்காகவும் துக்கப் படாதே.

स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि |
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते || 31||

swa-dharmam api chāvekṣhya na vikampitum arhasi
dharmyāddhi yuddhāch chhreyo ’nyat kṣhatriyasya na vidyate

உன் ஸ்வதர்மத்தைப் பற்றியும் நினைத்துப் பார்க்காமல், நீ சலனப் படக் கூடாது. ஒரு க்ஷத்திரியனுக்கு யுத்தத்தை விட சிறந்த தர்மம் மற்றொன்று இல்லை.

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् |
सुखिन: क्षत्रिया: पार्थ लभन्ते युद्धमीदृशम् || 32||

yadṛichchhayā chopapannaṁ swarga-dvāram apāvṛitam
sukhinaḥ kṣhatriyāḥ pārtha labhante yuddham īdṛiśham

பார்த்தனே, க்ஷத்திரியர்கள்,  இந்த யுத்தம் போல,  சுவர்க்க வாயிலைத் திறக்கும், யதேச்சையான வாய்ப்புகளால் மிகுந்த சந்தோஷத்தை அடைகிறார்கள்.

अथ चेतत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यसि |
तत: स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि || 33||

atha chet tvam imaṁ dharmyaṁ saṅgrāmaṁ na kariṣhyasi
tataḥ sva-dharmaṁ kīrtiṁ cha hitvā pāpam avāpsyasi

நீ இந்த தர்ம யுத்தத்தை செய்யாமல், ஸ்வதர்மத்தையும், புகழையும் கை விட்டால், பாவம் கிடைக்கப் பெறுவாய்.

अकीर्तिं चापि भूतानि
कथयिष्यन्ति तेऽव्ययाम् |
सम्भावितस्य चाकीर्ति
र्मरणादतिरिच्यते || 34||

akīrtiṁ chāpi bhūtāni
kathayiṣhyanti te ’vyayām
sambhāvitasya chākīrtir
maraṇād atirichyate

மேலும் மக்கள் உன்னுடைய அபகீர்த்தியை ஓயாமல் என்றென்றைக்கும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். உன்னைப் போன்ற மதிப்பு மிகுந்தவனுக்கு அபகீர்த்தி மரணத்தை விட மோசமானது.

भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथा: |
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् || 35||

bhayād raṇād uparataṁ mansyante tvāṁ mahā-rathāḥ
yeṣhāṁ cha tvaṁ bahu-mato bhūtvā yāsyasi lāghavam

மஹாரதர்கள்(10000 சாதாரண வீரர்களுக்கு சமமானவர்கள்), பயத்தினால், ரணகளத்திலிருந்து ஓடி விட்டாய் என்று உன்னைப் பற்றி நினைப்பார்கள். அவர்கள் நடுவே மிகுந்த மதிப்பு கொண்டவனாக இருந்தவனான நீ பெருமை குன்றப் பெறுவாய்.

अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिता: |
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दु:खतरं नु किम् || 36||

avāchya-vādānśh cha bahūn vadiṣhyanti tavāhitāḥ
nindantastava sāmarthyaṁ tato duḥkhataraṁ nu kim

உனக்கு நன்மை நினைக்காதவர்கள், சொல்லக் கூடாத வார்த்தைகளைச் சொல்லி உன்னை நிந்தனை செய்வார்கள்; உன் சாமர்த்தியத்தை குறைத்து மதிப்பிடுவார்கள்; அதை விட துக்க கரமானது வேறென்ன இருக்க முடியும்.

हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् |
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय: || 37||

hato vā prāpsyasi swargaṁ jitvā vā bhokṣhyase mahīm
tasmād uttiṣhṭha kaunteya yuddhāya kṛita-niśhchayaḥ

நீ கொல்லப்பட்டால் சுவர்க்கத்தை அடைவாய், வெற்றி பெற்றால் இப்பெருநிலத்தை ஆள்வாய்.   அதனால் எழுந்திரு குந்தியின் மகனே, யுத்தம் செய்ய உறுதி கொள்.

सुखदु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ |
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि || 38||

sukha-duḥkhe same kṛitvā lābhālābhau jayājayau
tato yuddhāya yujyasva naivaṁ pāpam avāpsyasi

சுக துக்கத்தையும், லாப-நஷ்டத்தையும், வெற்றி-தோல்வியையும் சமமாக பாவித்து யுத்தம் செய்; எந்த பாவமும் உன்னைச் சேராது.

एषा तेऽभिहिता साङ्ख्ये
बुद्धिर्योगे त्विमां शृणु |
बुद्ध्या युक्तो यया पार्थ
कर्मबन्धं प्रहास्यसि || 39||

eṣhā te ’bhihitā sānkhye
buddhir yoge tvimāṁ śhṛiṇu
buddhyā yukto yayā pārtha
karma-bandhaṁ prahāsyasi
 
இவ்வாறு உனக்கு சாங்க்ய யோகத்தை(ஆத்மாவைப் பற்றிய தர்க்க ரீதியான விளக்கம்) விளக்கி இருக்கிறேன். புத்தி யோகத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்; பார்த்தனே அதை நீ புரிந்து கொண்டால், கர்ம பந்தத்திலிருந்து விடு படுவாய்.

नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते |
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् || 40||

nehābhikrama-nāśho ’sti pratyavāyo na vidyate
svalpam apyasya dharmasya trāyate mahato bhayāt

இது போன்ற உணர்வுடன் செய்யப்படும் முயற்சியால், நாசமோ, தேவையில்லாத விளைவோ இருக்காது. நம் ஸ்வதர்மத்தை சிறிதளவு செய்தாலும் போதும், அது பெரும் பயத்திலிருந்து நம்மை காக்கும்.

व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन |
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् || 41||

vyavasāyātmikā buddhir ekeha kuru-nandana
bahu-śhākhā hyanantāśh cha buddhayo ’vyavasāyinām

குருவின் வம்சத்தில் உதித்தவனே, உறுதி கொண்டவனின் புத்தி ஒரே வழியில் செயல் படுகிறது. உறுதியற்றவனின் புத்தியோ முடிவற்ற எண்ணற்ற வழிகளில் செயல் படுகிறது.

यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चित: |
वेदवादरता: पार्थ नान्यदस्तीति वादिन: || 42||

yāmimāṁ puṣhpitāṁ vāchaṁ pravadanty-avipaśhchitaḥ
veda-vāda-ratāḥ pārtha nānyad astīti vādinaḥ

மறுபக்கத்தை அறியாதவர்கள்(குறைந்தளவு புரிதல் கொண்டவர்கள்) , இது போன்ற பூப்பூவான சொற்களை தாங்களும் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்; பார்த்தனே, வேதத்தின் வார்த்தைகளையே நம்புபவர்கள், வேறொன்று இருக்கிறது என்று நினைக்காதவர்கள்.

कामात्मान: स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम् |
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति || 43||

kāmātmānaḥ swarga-parā janma-karma-phala-pradām
kriyā-viśheṣha-bahulāṁ bhogaiśhwarya-gatiṁ prati

காமம் கொண்ட மனம் படைத்தவர்கள், சுவர்க்கத்தை விரும்புபவர்கள், உயர்ந்த பிறவிக்காகவும், கர்ம பலத்திற்காகவும், வசதி, செல்வம், நற்கதி ஆகியவற்றை அடைவதற்காகவும் பலவிதமான விசேஷமான செயல்களைச் செய்கிறார்கள்.

भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् |
व्यवसायात्मिका बुद्धि: समाधौ न विधीयते || 44||

bhogaiśwvarya-prasaktānāṁ tayāpahṛita-chetasām
vyavasāyātmikā buddhiḥ samādhau na vidhīyate

போகம், ஐஸ்வர்யம் ஆகியவற்றில் ஆசை கொண்டவர்கள், அந்த ஆசையால் சித்தம் அபஹரிக்கப் பட்டவர்கள், அந்த ஆசையிலேயே ஈடுபட்டு இருப்பவர்களின் புத்தி எப்பொழுதும் சமாதானம் அடைவதில்லை.

त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन |
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान् || 45||

trai-guṇya-viṣhayā vedā nistrai-guṇyo bhavārjuna
nirdvandvo nitya-sattva-stho niryoga-kṣhema ātmavān

வேதம் மூன்று குணம் கொண்ட விஷயங்களைப் பற்றியது; அர்ஜுனா, மூன்று குணங்களைக் கடந்து செல்வாய்; இரண்டற்ற நிலை கொள்; எப்போதும் சத்வத்தில் நிலைத்திரு; க்ஷேமத்தைப் பற்றிய கவலையின்றியிரு; ஆத்மாவில் நிலைத்திரு;

यावानर्थ उदपाने सर्वत: सम्प्लुतोदके |
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत: || 46||

yāvān artha udapāne sarvataḥ samplutodake
tāvānsarveṣhu vedeṣhu brāhmaṇasya vijānataḥ

எதை கிணற்றுத் தண்ணீர் செய்யுமோ, அதை கட்டாயம் பெரும் ஏரியின் தண்ணீர் நிறைவேற்றிவிடும். பிரம்மத்தை நன்கு அறிவதால் வேதம் சொல்வதனைத்தையும் நிறைவேற்றி விட முடியும்.

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि || 47 ||

karmaṇy-evādhikāras te mā phaleṣhu kadāchana
mā karma-phala-hetur bhūr mā te saṅgo ’stvakarmaṇi

செயல்களைச் செய்யும் அதிகாரம் மட்டும் தான் உன்னுடையது; அதன் பலன்களின் மீது எப்போதும் கிடையாது; உன் செயல்களினால் உண்டாகும் பலன்கள் உன்னால் உண்டானவை அல்ல; எப்போதும் செயலற்றிருக்கும் நிலையில் இருக்காதே.

योगस्थ: कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय |
सिद्ध्यसिद्ध्यो: समो भूत्वा समत्वं योग उच्यते || 48||

yoga-sthaḥ kuru karmāṇi saṅgaṁ tyaktvā dhanañjaya
siddhy-asiddhyoḥ samo bhūtvā samatvaṁ yoga uchyate

தனஞ்சயனே, யோகத்தில் நின்று செயல்களைச் செய்; பலன்களை தியாகம் செய்; வெற்றி தோல்வியை சமமாகப் பார்; இந்த சமத்துவத்தையே யோகம் என்கின்றனர்.

दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय |
बुद्धौ शरणमन्विच्छ कृपणा: फलहेतव: || 49||

dūreṇa hy-avaraṁ karma buddhi-yogād dhanañjaya
buddhau śharaṇam anvichchha kṛipaṇāḥ phala-hetavaḥ

தனஞ்சயனே, புத்தி யோகத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது கர்மம்(செயல்). புத்தியில்(ஞானத்தில்) சரணம் அடைவாய். கஞ்சர்கள் தான் கர்ம பலனை விரும்புவார்கள்.

बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते |
तस्माद्योगाय युज्यस्व योग: कर्मसु कौशलम् || 50||

buddhi-yukto jahātīha ubhe sukṛita-duṣhkṛite
tasmād yogāya yujyasva yogaḥ karmasu kauśhalam

புத்தி கொண்டவர்கள் இந்த இக லோகத்திலேயே நற்செயல்-கொடுஞ்செயல் இரண்டிலிருந்தும் விடுதலை கொள்கிறார்கள். அதனால் யோகத்தில் இணைந்து கொள். மிக நேர்த்தியாக செயலைச் செய்வதே யோகம் என்றறிந்து கொள்.