பந்தாட்டம்

முகத்திலறைந்து
நிலை குலையச் செய்கிறது
பேரலை ஒன்று

தப்பிப் பிழைக்க 

தொடர்ந்து வருகின்றன
சிற்றலைகள்

தள்ளிச் சாய்க்காவிட்டாலும்
புதையப் புதைய
காலடி மண்ணை
அரித்துச் செல்கின்றன

எவ்வலையிலும்

நீங்காதிருப்பதில்
இருக்கிறது
என் ஆட்டம்

கைக்குக் கை
தட்டித் தட்டி
ஆடும்
இப்பந்தாட்டத்தில்

வசியம் கொண்டு
திளைக்கிறேன்

வேறு வேலையற்ற
இப்பெருங்கடலில்