அஷ்டபதி 21-மஞ்ஜுதர..(ப்ரவிஸ..)

ஹாராவளீ தரள காஞ்சன காஞ்சிதாம
மஞ்ஜீர கங்கண மணித்யுதி தீபிதஸ்ய
த்வாரே நிகுஞ்ஜ நிலயஸ்ய ஹரீம் நிரீக்ஷ்ய
வ்ரீடாவதீம் அத ஸகீ நிஜகாத ராதாம்

பிறகு, அவன் அணிந்திருந்த முத்து ஹாரங்களின் பதக்கத்தினாலும், தங்க இடையாபரணத்தினாலும், கொலுசு, வளையல் ஆகியவற்றிலிருந்த மணிகளின் ஒளியினாலும் ஒளிர்ந்த அந்த கொடிவீட்டின் வாசலில் நின்ற ஹரியைக் கண்டதும் வெட்கம் கொண்ட ராதையைப் பார்த்து அவளின் தோழி இவ்வாறு சொன்னாள்:

மஞ்ஜுதர குஞ்ஜதள கேளி ஸதனே
இஹ விலஸ ரதி ரபஸ ஹஸித வதனே

ரதி கிரீடையின் பரவசத்தினால் புன்னகைக்கும் முகத்துடன், மயக்கும் காதல் மாளிகையான இந்த கொடிவீட்டினுள் மகிழ்ந்திரு

ப்ரவிஸ ராதே மாதவ ஸமீபம் குரு முராரே மங்கள ஷதானி

ராதே, இங்கு பிரவேஸித்து, மாதவனின் அருகில் சேர்ந்திரு; முராரி, நூறு மங்களங்களை அவளுக்கு அளி.

நவ பவதஶோகதள ஶயன ஸாரே
இஹ விலஸ குசகலஶ தரள ஹாரே

முலைகளின் மேல் தவழும் ஹாரங்களை அணிந்தவளே, புதிய அசோக மர இலைகளால் செய்யப்பட்ட இந்த சயனத்தில் மகிழ்ந்திரு.

சலமலய வன பவன ஸுரபி ஶீதே
இஹ விலஸ மதன ஷர நிகர பீதே

மன்மதனின் அம்புக்கூட்டங்களைக் கண்டு பயம் கொள்பவளே, மெல்ல வீசும் மலய மாருதத்தால் வாசனையூட்டப்பட்ட, குளிர்விக்கப்பட்ட இந்த கொடிவீட்டில் மகிழ்ந்திரு.

குஸுமஶய ரசிதஸுசி வாஸ கேஹே
இஹ விலஸ குஸும ஸுகுமாரதேஹே

மலர்களைப் போன்ற மென்மையான தேகம் கொண்டவளே, மலர் குவியல்களால் அலங்கரிக்கப்பட்ட, சுத்தமான இந்த வீட்டில் மகிழ்ந்திரு.

மது தரள பிகநிகர நினத முகரே  
இஹ விலஸ தஶனருசி ருசிர ஶிகரே

மாணிக்கங்களைப் போல் ஜொலிக்கும் பற்களையுடையவளே, இனிய இளந்தளிர்களை உண்ட குயில்கள் ஆனந்தமாக சப்தமிடும் இந்த கொடிவீட்டில் மகிழ்ந்திரு.

விதத பஹு வல்லி நவ பல்லவ கனே
இஹ விலஸ பீன குச கும்ப ஜகனே

அழகிய உடல் கொண்ட ராதே, நிறைய கொடிகளால் பின்னப்பட்ட, இளந்தளிர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கொடி வீட்டில் மகிழ்ந்திரு.

மது முதித மது பகுல கலிதராவே 
இஹ விலஸ மதன ஶர ரபஸ பாவே  

தேனுண்ட வண்டுகள் உற்சாகமாக சப்தமிடும் இக்கொடிவீட்டில் மலரம்புகளால் ஸரஸ பாவம் கொண்டுள்ள ராதே, இங்கு மகிழ்ந்திரு.

விஹித பத்மாவதீ ஸுக ஸமாஜே
பணதி ஜயதேவ கவி ராஜ ராஜே

பத்மாவதியோடு சுகமாய் வாழ்ந்து வரும், கவிஞர்களின் ராஜ ராஜனான ஜெயதேவர் இங்கனம் உறைக்கிறார்.