நிலவாளும் உலகு

நிலவாளும்
இவ்வுலகில்

நான்
அன்னையோ
அக்கையோ
பெண்ணோ
அல்ல

ஆயிரம் கூடல்களின்
ஆயிரமாயிரம் பிரிவுகளின்

வெட்கங்களின்
புன்னகையின்
சிரிப்பொலியின்

தழுவல்களின்
முத்தங்களின்
அணைப்புகளின்

முனகல்களின்
கண்ணீரின்

தனிமைகளின்
துயரங்களின்

சிறு துளி..

நீயும் தான்

உன் முயக்கம் என்னோடல்ல
எனதும் தான்..