சுருள்

சிவப்பில் ஒன்று
கருப்பில் ஒன்று
பச்சை
மஞ்சள்

ஆடைகளால்
மேலும் மேலும்
இன்னும் நன்றாய்
மறைத்துக் கொள்கிறேன்

இத்தனை ஆடைகள்
இருப்பதாலேயே

கண்டுபிடிக்க
முடியவில்லை

சொல்லிக் கொள்கிறேன்

என்னை நோக்கியே
வருகிறார்

இதோ அவர் பார்வை

எப்படியும்
கண்டு பிடித்து விடுவார் 

மூச்சை இருக்கிப் பிடித்த படி
சுருண்டு
அமர்ந்து
காத்திருக்கிறேன்

ஜபமாலையை உருட்டியபடி