சிற்றமுதம்

ஆடை உரித்ததும்
புன்னகை உதிர்த்ததும்

கண்ணோர ஒளி கூட
மறைத்ததும்

இன்னும்
உரிக்க உரிக்க 

நிணமும் சீழும் மலமுமென
ஒவ்வொன்றாய்..

எங்கோ ஒரு மூலையில்

என் சிரிப்பில் 
எப்போதும் 
சிந்தும்
சிற்றமுதத் துளியும்
இருக்கத் தான் வேண்டும்

தேடித் தேடிக்
சென்றடையும் முன்

இத்தனை அழுக்கா

இன்னும்
எத்தனை இழப்போ

எப்படியும்
அடைந்து விடத் தான் வேண்டும்