
அவ்விடத்தோடு இறுக்கி அடிக்கப்பட்டிருக்கிறது அதன் விதி நின்ற இடத்திலேயே உண்டு செழித்தோ காய்ந்து மருகியோ.. சலசலவென கைகால்களை அசைக்கலாமே ஒழிய ஒரு கணமும் அகல வழியில்லை கைகளை காற்றில் அளைந்து வெயிலோ மழையோ தூவலோ வெக்கையோ கணுக் கணுவென சேர்த்துக் கொள்கிறது கணங்களை இடம் விட்டகலாத சீதையாய் முடியும் வரை