ஸ்லோகம்
ஸுசிரம் அனுநயனே ப்ரீணயித்வா ம்ருகாக்ஷீம்
கதவதி க்ருதவேஷ கேஸவே குஞ்ஜ ஸய்யாம்
ரசித ருசிர பூஷாம் த்ருஷ்டி மோக்ஷே ப்ரதோஷே
ஸ்புரதி நிரவஸாதாம் காபி ராதாம் ஜகாத
வெகு நேரம் இனிமையான வார்த்தைகளால் மான்விழியாளன ராதையை ப்ரீதி செய்துவிட்டு, கொடி வீட்டில் இருந்த ஒரு படுக்கைக்கு கேசவன் நன்றாக அலங்கரித்துக் கொண்டு சென்றான். கண் மயங்கும் பிரதோஷ வேளையில், அழகிய நகைகளை அணிந்து கொண்ட ஒரு பெண் அங்கு தோன்றி, ஊக்கம் குன்றாமல் இருந்த ராதையிடம் இவ்வாறு சொன்னாள்:
விரசித சாடு வசன ரசனம் சரணே ரசித ப்ரணிபாதம்
ஸம்ப்ரதி மஞ்ஜுள வஞ்சுள ஸீமனி கேளிஸயனம் உபயாதம்
உன்னிடம் சாமர்த்தியமான வார்த்தைகளை வரைந்தவன், உன் பாதங்களில் விழுந்து வணங்கியவன், இப்போது அழகிய வஞ்சுள மலர்கள் இருக்கும் பிரதேசத்தில் கேளி சயனத்தில் இருக்கிறான்.முக்தே மதுமதனம் ஹே ராதே முக்தே மதுமதனம்
அனுகதம் அனுஸர ராதே
பேதைப் பெண்ணே, ஓ ராதே, மது என்ற அரக்கனை அழித்தவனை, உன்னையே பின்னாலேயே தொடர்ந்து கொண்டிருந்தவனை, இப்போது நீ தொடர்ந்து செல்.
கன ஜகன ஸ்தன பாரபரே தர மந்தர சரண விஹாரம்
முகரித மணி மஞ்ஜீர முபைஹி விதேஹி மராள விகாரம்
உன் பெருத்த இடையையும், ஸ்தனங்களையும் தாங்குவதால், உன் கால்கள் மெதுவாகவும், சுழன்றும் செல்வதாலும், உன் கொலுசுகளின் மணி சப்தத்தினாலும், அன்னத்தின் நடையை அர்த்தமற்றதாக்கி, அவனைச் சென்று சேர்வாயாக.
ஸ்ருணு ரமணீயதரம் தருணீஜன மோஹன மதுரிபு ராவம்.
குஸுமஸராஸன ஸாஸன வந்தினி பிகநிகரே பஜபாவம்
மலர் அம்புகளை எய்யும் மன்மதனின் விதிகளை வணங்கும் குயில்களின் ஓசையை ஒத்த, மனதை மகிழ்விக்கும், உன்னதமான, இளம் யுவதிகளை மயக்கும், மது எதிரியின் இசையை கேள்; அதன் பாவத்தை அறிந்து கொள்;
அனில தரள கிஸலய நிகரேண கரேண லதா நிகுரும்பம்
ப்ரேரணமிவ கரபோரு கரோதி கதிம் ப்ரதி முஞ்ச விளம்பம்
அழகிய தொடைகளைக் கொண்டவளே, காற்றினால் அசையும் அக்கொடியின் இளந்தளிர்கள், கையினால் வருக என்றழைப்பது போலுள்ளது; அதனால் அவ்வழியில், அவனிடம் செல்வதை நீ தாமதிக்காதே
ஸ்புரித மனங்க தரங்க வஸாதிவ ஸூசித ஹரி பரிரம்பம்
ப்ருச்ச மனோஹர ஹார விமலஜலதாரம் அமும் குச கும்பம்
மன்மதனின் அலைகளின் வசம் அலைக்கழிக்கப்படுவதைப் போல மின்னும், மிக அழகிய, சுத்த ஜலதாரையைப் போன்ற, இந்த முத்து மாலைகளை, தாங்கி இருக்கும் உன் முலைகளைக் கேள், ஹரியின் சுற்றி வளைக்கும் அணைப்பு வேண்டுமா என்று.
அதிகதம் அகில ஸகீபிரிதம் தவ வபுரபி ரதிரண ஸஜ்ஜம்
சண்டி ரஸித ரஸனாரவ டிண்டிமம் அபிஸர ஸரஸம் அலஜ்ஜம்
உன் அனைத்து தோழிகளுக்கும் நன்கு தெரியும்; உன் தேகம் ரதியின் போர்களத்துக்குத் தயாராக இருக்கிறது; ஓ சண்டி, உன் இடைமணியை துந்துபியைப் போல் முழக்கியபடி, வெட்கமின்றி காதலுடன் அவனிடம் செல்வாய்.
ஸ்மரஸர ஸுபக நகேன ஸகீம் அவலம்ப்ய கரேண ஸலீலம்
சல வலய க்வணிதை: அவபோதய ஹரிமபி நிஜகதி ஸீலம்
மன்மதனின் அம்புகளைப் போன்ற அழகிய நகங்களை உடைய உன் கரங்களை தோழியின் மீது போட்டு, ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு நட; உன் வளையல்களின் நாதம் ஹரிக்கு உன் வருகையை அறிவிக்கட்டும்.
ஸ்ரீ ஜயதேவ பணிதம் அதரீ க்ருத ஹாரம் உதாஸித வாமம்
ஹரிவினிஹித மனஸாம் அதிதிஷ்டது கண்டதடீம் அவிராமம்
ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட இது, முத்து மாலைகளை கீழானதென்றாக்குகிறது; கோணல்களை நேராக்குகிறது; இது ஹரியின் பக்தர்களின் கண்டங்களிலும், அவர்தம் உதடுகளிலும், ஓய்வின்றி ஆட்சி செய்யட்டும்.