என் பாதையில்

நான் ஓடிக் கொண்டிருக்கும்
என் பாதையில்

விருட்டென்று
என்னைக் கடந்து
ஓடுகிறார்
அவர்

ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே
உதட்டில் புன்னகையுடன்

நான் இருப்பது பந்தயத்திலா..

என்னைக் கடந்தால்
அவருக்கு
வெற்றி கிட்டுமோ

கடந்து சென்றவரை
பின்னாலேயே ஓடிச் சென்று 
தொட்டு
கேட்டு விட்டு வரவா..

என்ன கிட்டியது என்று