பகவத் கீதை- அத்தியாயம் 16-தெய்வாஸுரீ சம்பத் விபாக யோகம்

श्रीभगवानुवाच |
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थिति: |
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् || 1||

śhrī-bhagavān uvācha
abhayaṁ sattva-samśhuddhir jñāna-yoga-vyavasthitiḥ
dānaṁ damaśh cha yajñaśh cha svādhyāyas tapa ārjavam

பகவான் சொன்னார்:
பயமற்றிருத்தல், சித்தத்தை சுத்தமாக வைத்திருத்தல், ஆத்ம ஞானத்தை அறிவதில் ஈடுபட்டிருத்தல், தானம் செய்தல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியிருத்தல், யாகங்கள் செய்தல், சுயமாக கற்றுக் கொண்டே இருத்தல், தவம் செய்தல்(சுகங்களை ஒறுத்தல்) மற்றும் நேரடித் தன்மையுடனிருத்தல்,

अहिंसा सत्यमक्रोधस्त्याग: शान्तिरपैशुनम् |
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् || 2||

ahimsā satyam akrodhas tyāgaḥ śhāntir apaiśhunam
dayā bhūteṣhv aloluptvaṁ mārdavaṁ hrīr achāpalam

அகிம்சையும் சத்தியமும் கொண்டிருத்தல், கோபமற்றிருத்தல், தியாகம் செய்தல், சாந்தமாயிருத்தல், குற்றம் சொல்லாதிருத்தல், பிராணிகளிடம் தயையோடு இருத்தல், பேராசை அற்றிருத்தல், மென்மையானவராயிருத்தல், வெட்கம் கொண்டிருத்தல், சபலம் அற்றிருத்தல்,


तेज: क्षमा धृति: शौचमद्रोहोनातिमानिता |
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत || 3||

tejaḥ kṣhamā dhṛitiḥ śhaucham adroho nāti-mānitā
bhavanti sampadaṁ daivīm abhijātasya bhārata

சுறுசுறுப்புடன் இருத்தல், பொறுமையும் தைரியமும் கொண்டிருத்தல், தூய்மையைப் பேணுதல், துரோகம் செய்யாதிருத்தல், தற்பெருமையற்றிருத்தல் ஆகியவை தெய்வீக குணம் கொண்டவர்களின் இயல்புகள், பாரதனே(பரதனின் குலத்தில் பிறந்தவன்).

दम्भो दर्पोऽभिमानश्च क्रोध: पारुष्यमेव च |
अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम् || 4||

dambho darpo ’bhimānaśh cha krodhaḥ pāruṣhyam eva cha
ajñānaṁ chābhijātasya pārtha sampadam āsurīm

போலித்தனம், ஆணவம் கொண்டிருத்தல், கர்வம், குரோதம், கடுமையானவராய் இருத்தல், அறியாமை கொண்டிருத்தல் ஆகியவை அசுரத் தன்மை கொண்டவர்களின் குணங்கள் பார்த்தனே(பிருதையின் மகனே).

दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरी मता |
मा शुच: सम्पदं दैवीमभिजातोऽसि पाण्डव || 5||

daivī sampad vimokṣhāya nibandhāyāsurī matā
mā śhuchaḥ sampadaṁ daivīm abhijāto ’si pāṇḍava

தெய்வீக குண நலன்கள் விமோசனத்துக்கும், அசுர குணங்கள் அடிமைத் தனத்துக்கும் இட்டுச் செல்கின்றன; பாண்டவனே, நீ கவலை கொள்ளாதிரு, நீ தெய்வ குணங்களோடு பிறந்தவன்.

द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च |
दैवो विस्तरश: प्रोक्त आसुरं पार्थ मे शृणु || 6||

dvau bhūta-sargau loke ’smin daiva āsura eva cha
daivo vistaraśhaḥ prokta āsuraṁ pārtha me śhṛiṇu

இவ்வுலகத்தில் உள்ள மனிதர்களில் இரண்டு விதமானவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்-தெய்வீக குணம் கொண்டவர்கள், அசுர குணம் கொண்டவர்கள்; தெய்வீகத்தைப் பற்றி விளக்கமாகச் சொன்னேன்; பார்த்தனே அசுரத்தைப் பற்றி நான் சொல்வதைக் கேள்.

प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुरा: |
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते || 7||

pravṛittiṁ cha nivṛittiṁ cha janā na vidur āsurāḥ
na śhauchaṁ nāpi chāchāro na satyaṁ teṣhu vidyate

அசுர குணம் வாய்த்தவர்கள் நல்ல செயல்களுக்கும், நீக்கப் பட வேண்டிய செயல்களுக்கும் நடுவே உள்ள வேற்றுமையை அறிய மாட்டார்கள்; அவர்களிடம் தூய்மையோ, நன்னடத்தையோ, உண்மையோ எதுவுமே இருக்காது.

असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् | 
अपरस्परसम्भूतं किमन्यत्कामहैतुकम् || 8||

asatyam apratiṣhṭhaṁ te jagad āhur anīśhvaram
aparaspara-sambhūtaṁ kim anyat kāma-haitukam

அவர்கள் சொல்கிறார்கள்- 'இவ்வுலகத்தில் உண்மையென்று ஒன்றில்லை; இவ்வுலகத்துக்கு ஆதாரம் என்று ஒன்றில்லை(எதுவும் அதைத் தாங்கி நிற்கவில்லை); கடவுள் என்று ஒன்றில்லை; இவ்வுலகம் ஆண் பெண் சேர்க்கையால் உருவானது; சிற்றின்ப நுகர்வைத் தவிர வேறொன்றுக்காகவும் இது இல்லை'.
இவ
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धय: |
प्रभवन्त्युग्रकर्माण: क्षयाय जगतोऽहिता: || 9||

etāṁ dṛiṣhṭim avaṣhṭabhya naṣhṭātmāno ’lpa-buddhayaḥ
prabhavanty ugra-karmāṇaḥ kṣhayāya jagato ’hitāḥ

இது போன்ற பார்வையைக் கைக்கொண்டு, தொலைந்து போன ஆன்மாவைக் கொண்ட இவர்கள், அற்ப புத்தியுடைய இவர்கள், இவ்வுலகின் எதிரிகளான இவர்கள், தங்களின் தீவிரமான செயல்களால் , அதன் அழிவுக்கு வழி கோலுகிறார்கள்.

काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विता: |
मोहाद्गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रता: || 10||

kāmam āśhritya duṣhpūraṁ dambha-māna-madānvitāḥ
mohād gṛihītvāsad-grāhān pravartante ’śhuchi-vratāḥ

இவர்கள் திருப்தியற்ற காமம், போலித்தனம், கர்வம் ஆகியவற்றுக்கு இடமளிப்பதால் மதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தமக்குத் தாமே கொண்டுள்ள மோகத்தினால், இது போன்ற நன்மையற்ற விஷயங்களில் ஈர்க்கப் படுவதனால், இவர்கள்,  அசுத்தமான நடத்தைகளை வளரச் செய்கிறார்கள்.

चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिता: |
कामोपभोगपरमा एतावदिति निश्चिता: || 11||

chintām aparimeyāṁ cha pralayāntām upāśhritāḥ
kāmopabhoga-paramā etāvad iti niśhchitāḥ

மரணத்தில் மட்டுமே தீரக்கூடிய எல்லையற்ற கவலைகளால் பீடிக்கப்பட்டவர்களாக, இருப்பினும் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமே தம் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்று நிச்சயமாக நம்புகிறார்கள்.

आशापाशशतैर्बद्धा: कामक्रोधपरायणा: |
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्जयान् || 12||

āśhā-pāśha-śhatair baddhāḥ kāma-krodha-parāyaṇāḥ
īhante kāma-bhogārtham anyāyenārtha-sañchayān

நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டப்பட்டவர்கள்; காமத்தின் குரோதத்தின் வசப்பட்டவர்கள்; அவர்கள் வாழ்வதே காமத்தை அனுபவிப்பதற்காகவும், நியாயமற்ற முறையில் செல்வம் சேர்ப்பதற்காகவும் தான்.

इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम् |
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् || 13||

idam adya mayā labdham imaṁ prāpsye manoratham
idam astīdam api me bhaviṣhyati punar dhanam

"இது இன்று என்னால் பெறப்பட்டது; இந்த மனோரதத்தை அடைவேன்; இது என்னுடையது; இதுவும் எனதே; நாளை இதை விட அதிகமான செல்வம் என்னிடம் இருக்கும்."

असौ मया हत: शत्रुर्हनिष्ये चापरानपि |
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी || 14||

asau mayā hataḥ śhatrur haniṣhye chāparān api
īśhvaro ’ham ahaṁ bhogī siddho ’haṁ balavān sukhī

"அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான்; மற்ற எதிரிகளையும் நானே வெல்வேன்; நானே தலைவன்; நான் அனுபவிக்கப் பிறந்தவன்; நான் வெல்பவன், பலவான், சுகமாக இருக்கப் பிறந்தவன்."

आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया |
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिता: || 15||

āḍhyo ’bhijanavān asmi ko ’nyo ’sti sadṛiśho mayā
yakṣhye dāsyāmi modiṣhya ity ajñāna-vimohitāḥ

"நான் பணக்காரன்; உயர்ந்த நிலையில் இருக்கும் உறவுகளைக் கொண்டவன்; என்னைப் போல் வேறொருவர் யாருண்டு; நான் யாகங்கள் செய்கிறேன்; நான் தானம் செய்கிறேன்; நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று அஞ்ஞானிகள் தங்களைப் பற்றியே பெரும் மோகம் கொள்கிறார்கள்.

अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृता: |
प्रसक्ता: कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ || 16||

aneka-chitta-vibhrāntā moha-jāla-samāvṛitāḥ
prasaktāḥ kāma-bhogeṣhu patanti narake ’śhucha

இது போன்ற அநேக கற்பனைகளினால் பிரமை ஏற்பட்டு, மோக வலையில் சிக்கி, இந்திரிய சுகங்களில் போதை கொண்டு , அதிலேயே ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர்கள்,  அசுத்தமான நரகத்தில் விழுந்து விடுகிறார்கள்.

आत्मसम्भाविता: स्तब्धा धनमानमदान्विता: |
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् || 17||

ātma-sambhāvitāḥ stabdhā dhana-māna-madānvitāḥ
yajante nāma-yajñais te dambhenāvidhi-pūrvakam

தன்னைப் பற்றிய கர்வம் உள்ளவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், தங்கள் செல்வங்களினால் தற்பெருமை கொண்டவர்கள், நியமங்களை அனுசரிக்காமல், 'நிறைய யாகங்கள் செய்பவர்' என்ற பெயர் கிடைப்பதற்காக யாகங்கள் செய்கிறார்கள்.

अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिता: |
मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयका: || 18||

ahankāraṁ balaṁ darpaṁ kāmaṁ krodhaṁ cha samśhritāḥ
mām ātma-para-deheṣhu pradviṣhanto ’bhyasūyakāḥ

அகந்தை, பலம், கர்வம், காமம், கோபம் ஆகியவற்றால் சூழப்பட்ட அசுர குணம் கொண்டவர்கள், அவர்களுக்குள்ளும், மற்றவரின் உடல்களின் உள்ளும் இருக்கும் என்னை வெறுக்கிறார்கள்.

तानहं द्विषत: क्रूरान्संसारेषु नराधमान् |
क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु || 19||

tān ahaṁ dviṣhataḥ krūrān samsāreṣhu narādhamān
kṣhipāmy ajasram aśhubhān āsurīṣhv eva yoniṣhu

இது போல் வெறுப்பு கொள்ளும், கொடியவர்களை, நான் இந்த சம்சாரச் சுழலில், மீண்டும் மீண்டும் , அசுர கர்ப்பத்திலேயே பிறக்கும் படி எறிகிறேன்.

आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि |
मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् || 20||

āsurīṁ yonim āpannā mūḍhā janmani janmani
mām aprāpyaiva kaunteya tato yānty adhamāṁ gatim

குந்தியின் மகனே, அசுர கர்ப்பத்திலேயே ஒவ்வொரு ஜன்மத்திலும் பிறக்கும் இந்த மூடர்கள், என்னை அடைய முடியாமல், மிகக் கீழ்மையான கதியை அடைகிறார்கள்.

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन: |
काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् || 21||

tri-vidhaṁ narakasyedaṁ dvāraṁ nāśhanam ātmanaḥ
kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet

ஆத்மாவின் நாசம் என்னும் நரகத்திற்கு மூன்று நுழை வாயில்கள் இருக்கின்றன; காமம், கோபம் மற்றும் பேராசை, ஆகையால் இவை மூன்றையும் ஒருவர் விட்டு விட வேண்டும்.

एतैर्विमुक्त: कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नर: |
आचरत्यात्मन: श्रेयस्ततो याति परां गतिम् || 22||

etair vimuktaḥ kaunteya tamo-dvārais tribhir naraḥ
ācharaty ātmanaḥ śhreyas tato yāti parāṁ gatim

குந்தியின் மகனே, இம்மூன்று இருள் வாயில்களிலிருந்து தப்பும் ஒரு மனிதன், தன் ஆத்மாவின் மேன்மையைப் பற்றி தியானிப்பதால், அதன் பின் மிக உயர்ந்த கதியை அடைகிறான்.

य: शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारत: |
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् || 23||

yaḥ śhāstra-vidhim utsṛijya vartate kāma-kārataḥ
na sa siddhim avāpnoti na sukhaṁ na parāṁ gatim

யாரொருவர் சாஸ்த்திர விதிகளை கைவிட்டு விட்டு, மனம் போன போக்கில் இருக்கிறார்களோ, அவர்கள் வெற்றியையோ, சுகத்தையோ, உயர்ந்த கதியையோ அடைவதில்லை.

तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ |
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि || 24||

tasmāch chhāstraṁ pramāṇaṁ te kāryākārya-vyavasthitau
jñātvā śhāstra-vidhānoktaṁ karma kartum ihārhasi

அதனால், எவை செய்ய வேண்டும், எவை செய்யக் கூடாது என்பதற்கு சாஸ்த்திரங்கள் பிரமாணமாக இருக்கட்டும். சாஸ்த்திரங்களில் கூறியுள்ள நியமங்களை நன்கு அறிந்து கொண்டு, இந்த இக உலகில் நீ காரியங்களை ஆற்ற வேண்டும்.