அனங்கா

புது விதமாய்
சிக்கென ஆடையுடுத்தி

இசையில்
சொக்கி
மயங்கும்
கண்களை

தொட்டும் தொடாமலும்
அவன் ஆடையில்
கோலமிடும்
நக நுனிகளை

விரிந்திருக்கும்
சுருள் குழலை

அவன் காதருகே
மின்னும்
இவள் உதட்டோர
மின்னலை

ஒரே சொல்லென
சமைந்து கிடக்கும்
அவள்
உள்ளத்தை

இன்னும்
அமுதனைத்தையும்

அதிர விடாது
கலைக்காது
அசைக்காது
துளியும் சிந்தாது

பருக

முகமோ
உடலோ
அற்றவள் ஆகிறேன்