
கெக்கலியிட்டு சிரிக்கன்றனர் அவளின் சிறு புன்னகைக்கு பழி வாங்க சட்டென உருவுகின்றனர் நிறை சபையில் அவள் ஆடையை நிறைந்து நின்றவள் நெடிதாய் அணிந்தவள் வேண்டுமட்டும் உருவலாம் மின்னல் தாக்கியதாய் உலுக்கிப் போடுகிறது அவளுடல் அவள் வலி மெல்ல மண்ணிறங்குகிறது ஆடையற்ற உதிரமாய் ஒவ்வொரு நொடியும் எங்கோ ஓர் மூலையில்.. எப்போதாவது ஆடையோடாவது பல்லாயிரம் மடங்கு நிகர் வைப்பது ஒன்று தான் ஒரே வழி