பகவத் கீதை-அத்தியாயம் 1- அர்ஜுன விஷாத யோகம்(26-47)

तत्रापश्यत्स्थितान् पार्थ: पितृ नथ पितामहान् |
आचार्यान्मातुलान्भ्रातृ न्पुत्रान्पौत्रान्सखींस्तथा || 26||
श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि |

tatrāpaśhyat sthitān pārthaḥ pitṝīn atha pitāmahān
āchāryān mātulān bhrātṝīn putrān pautrān sakhīṁs tathā
śhvaśhurān suhṛidaśh chaiva senayor ubhayor api

பார்த்தன், அவ்விரண்டு சேனைகளிலும், தந்தையர்கள், பெருந்தந்தையர்கள், ஆசிரியர்கள், தாய் மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பெயரன்கள், நண்பர்கள், மாமனார்கள் மேலும் தோழர்கள் ஆகியோர் நின்றிருப்பதைப் பார்த்தான்.

तान्समीक्ष्य स कौन्तेय: सर्वान्बन्धूनवस्थितान् || 27||
कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत् |

tān samīkṣhya sa kaunteyaḥ sarvān bandhūn avasthitān
kṛipayā parayāviṣhṭo viṣhīdann idam abravīt

அங்கு நின்றிருந்த எல்லா உறவினர்களையும் பார்த்த குந்தியின் மகன், இரக்கத்திற்கு ஆளானவனாக, மிகுந்த சோகத்தோடு இவ்வாறு கூறினான்:

अर्जुन उवाच |
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम् || 28||
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति |

arjuna uvācha
dṛiṣhṭvemaṁ sva-janaṁ kṛiṣhṇa yuyutsuṁ samupasthitam
sīdanti mama gātrāṇi mukhaṁ cha pariśhuṣhyati

அர்ஜுனன் சொன்னான்:
கிருஷ்ணா, யுத்தம் செய்வதற்கு தயாராக நிற்கும் என் சொந்தங்களைப் பார்க்கும் போது, என் கை கால்கள் நடுங்குகின்றன, வாய் உலர்ந்து போகிறது.

वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते || 29||

vepathuśh cha śharīre me roma-harṣhaśh cha jāyate

என் உடலே அதிர்ச்சியில் அசைகிறது; எனக்கு மயிர் கூச்சம் எழுகிறது.

गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चै व परिदह्यते |
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मन: || 30||

gāṇḍīvaṁ sraṁsate hastāt tvak chaiva paridahyate
na cha śhaknomy avasthātuṁ bhramatīva cha me manaḥ

காண்டீவம் என் கைகளிலிருந்து நழுவுகிறது; என் சருமம் பற்றி எரிகிறது; என்னால் நிற்கவே முடியவில்லை; என் மனம் சுழல்கிறது.

निमित्तानि च पश्यामि विपरीतानि केशव |
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे || 31||

nimittāni cha paśhyāmi viparītāni keśhava
na cha śhreyo ’nupaśhyāmi hatvā sva-janam āhave

கேசவனே, விபரீதமான நிமித்தங்களையும், சகுனங்களையும் காண்கிறேன்; யுத்தத்தில் என் சொந்த மக்களைக் கொல்வதில் எந்த நன்மையையும் நான் பார்க்கவில்லை.

आचार्या: पितर: पुत्रास्तथैव च पितामहा: |
मातुला: श्वशुरा: पौत्रा: श्याला: सम्बन्धिनस्तथा || 34||

āchāryāḥ pitaraḥ putrās tathaiva cha pitāmahāḥ
mātulāḥ śhvaśhurāḥ pautrāḥ śhyālāḥ sambandhinas tathā

ஆசிரியர்கள், தந்தைகள், மகன்கள், பெருந்தந்தைகள், தாய் மாமன்கள், மாமனார்கள், பெயரன்கள், மைத்துனர்கள், சம்பந்திகள்


एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन |
अपि त्रैलोक्यराज्यस्य हेतो: किं नु महीकृते || 35||

etān na hantum ichchhāmi ghnato ’pi madhusūdana
api trailokya-rājyasya hetoḥ kiṁ nu mahī-kṛite

இவர்களைக் கொல்ல நான் விரும்பவில்லை; கொல்வதால், கிடைக்கப் போகும் இந்த மண்ணால், அல்லது மூன்று உலகங்களாலும் கூட என்ன பயன் இருக்கப் போகிறது.

निहत्य धार्तराष्ट्रान्न: का प्रीति: स्याज्जनार्दन |
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिन: || 36 ||

nihatya dhārtarāṣhṭrān naḥ kā prītiḥ syāj janārdana
pāpam evāśhrayed asmān hatvaitān ātatāyinaḥ

ஜனார்த்தனனே(ஜனங்களை காப்பாற்றுபவனே) நமக்கு தார்த்தராஷ்ட்ரர்களைக் கொல்வதால், என்ன இன்பம் கிடைக்கும்; நம்மை தாக்குபவர்கள் ஆனாலும், கொல்வதால் நமக்கு பாபமே கிடைக்கும்.
तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान् |
स्वजनं हि कथं हत्वा सुखिन: स्याम माधव || 37||

tasmān nārhā vayaṁ hantuṁ dhārtarāṣhṭrān sa-bāndhavān
sva-janaṁ hi kathaṁ hatvā sukhinaḥ syāma mādhava

அதனால் தார்த்தராஷ்ட்ரர்களையும், நம் உறவினர்களையும் கொல்லும் அருகதை நமக்கு இல்லை; மாதவனே, சொந்த மனிதர்களையே கொன்றபின் நமக்கு என்ன சுகம் கிடைக்கும்.

यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतस: |
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् || 38||

yadyapyete na paśhyanti lobhopahata-chetasaḥ
kula-kṣhaya-kṛitaṁ doṣhaṁ mitra-drohe cha pātakam

பேராசையால் பீடிக்கப்பட்ட மனமுடையவர்களான இவர்கள், குலத்தை நாசம் செய்யும் தோஷத்தையும், நண்பர்களுக்கு துரோகம் செய்யும் பாதகத்தையும் பார்க்கா விட்டாலும்,

कथं न ज्ञेयमस्माभि: पापादस्मान्निवर्तितुम् |
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन || 39||

ஜனார்த்தனனே,  குல நாசம் செய்யும் இந்த தோஷத்தை தெளிவாகப் பார்க்கும் நாம் ஏன் இந்த பாபத்திலிருந்து பின்வாங்கக் கூடாது.

कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा: सनातना: |
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत || 40||

kula-kṣhaye praṇaśhyanti kula-dharmāḥ sanātanāḥ
dharme naṣhṭe kulaṁ kṛitsnam adharmo ’bhibhavaty uta

குல நாசத்தால், காலாங்காலமாக உள்ள அக்குலத்தின் தர்மங்களும்(பாரம்பரியம்) அழிகின்றன; தர்மம் அழிந்தால், முழுக் குலமும் அதர்மத்தின் பிடியில் நிலை கொள்கிறது.

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय: |
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्कर: || 41||

adharmābhibhavāt kṛiṣhṇa praduṣhyanti kula-striyaḥ
strīṣhu duṣhṭāsu vārṣhṇeya jāyate varṇa-saṅkaraḥ

அதர்மம் நிலை கொண்டால், குல ஸ்திரீகள் கற்பிழக்கிறார்கள்; விருஷ்ணி குலத்தவனே துஷ்ட ஸ்திரீகளால் தேவையில்லாத பிரஜைகள் உருவாகிறார்கள்.

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च |
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रिया: || 42||

saṅkaro narakāyaiva kula-ghnānāṁ kulasya cha
patanti pitaro hy eṣhāṁ lupta-piṇḍodaka-kriyāḥ

இது போன்ற பிரஜைகளால் குலத்தில் இருப்போரும், குலத்தை நாசம் செய்தோரும் இருவரும் நரகம் போன்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள்; அவர்களுடைய முன்னோர்களும் பிண்டம் அளிக்கப்படாததால் வீழ்கிறார்கள்.

दोषैरेतै: कुलघ्नानां वर्णसङ्करकारकै: |
उत्साद्यन्ते जातिधर्मा: कुलधर्माश्च शाश्वता: || 43||

doṣhair etaiḥ kula-ghnānāṁ varṇa-saṅkara-kārakaiḥ
utsādyante jāti-dharmāḥ kula-dharmāśh cha śhāśhvatāḥ

இது போல் குல நாசம் செய்பவர்களின் தோஷத்தால் உண்டாகும் தேவையில்லாத பிரஜைகளால், எப்போதைக்குமாக ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிகின்றன.

उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन |
नरकेऽनियतं वासो भवतीत्यनुशुश्रुम || 44||

utsanna-kula-dharmāṇāṁ manuṣhyāṇāṁ janārdana
narake ‘niyataṁ vāso bhavatītyanuśhuśhruma

ஜனார்த்தனனே, இது போல அழிக்கப்பட்ட குல தர்மத்தையுடைய மனிதர்கள், முடிவிலா காலத்திற்கு நரகத்தில் வாழ்கிறார்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.

अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् |
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता: || 45||

aho bata mahat pāpaṁ kartuṁ vyavasitā vayam
yad rājya-sukha-lobhena hantuṁ sva-janam udyatāḥ

ஐயோ, ராஜ்ய சுகம் என்னும் பேராசையால், நம் சொந்த ஜனங்களையே கொல்லும் மிகப் பெரிய பாவத்தை செய்ய நாம் துணிந்திருக்கிறோம்.

यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणय: |
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत् || 46||

yadi mām apratīkāram aśhastraṁ śhastra-pāṇayaḥ
dhārtarāṣhṭrā raṇe hanyus tan me kṣhemataraṁ bhavet

இந்த ரணகளத்தில், கையில் ஆயுதங்களை வைத்திருக்கும் தார்த்தராஷ்ட்ரர்கள், ஆயுதம் இல்லாத என்னை, எந்த எதிர்வினையும் செய்யாத என்னை, கொல்வதே க்ஷேமம் அளிப்பதாக இருக்கும்.

सञ्जय उवाच |
एवमुक्त्वार्जुन: सङ्ख्ये रथोपस्थ उपाविशत् |
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानस: || 47||

sañjaya uvācha
evam uktvārjunaḥ saṅkhye rathopastha upāviśhat
visṛijya sa-śharaṁ chāpaṁ śhoka-saṁvigna-mānasaḥ

சஞ்சயன் சொன்னான்;
இவ்வாறு சொல்லிவிட்டு, அர்ஜுனன், யுத்தகளத்தில், கையிலிருந்த வில்லையும் அம்புகளையும் வீசிவிட்டு, சோகம் கொண்ட மனத்தினனாய் தேர்தட்டில் அமர்ந்தான்.