பகவத் கீதை -அத்தியாயம் 1-அர்ஜுன விஷாத யோகம்(1-25)

धृतराष्ट्र उवाच |
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः |
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ||1||

dhṛitarāśhtra uvācha
dharma-kṣhetre kuru-kṣhetre samavetā yuyutsavaḥ
māmakāḥ pāṇḍavāśhchaiva kimakurvata sañjaya

த்ருதராஷ்ட்ரன் சொன்னான்-
தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்வதற்காக அணிவகுத்து நின்றுள்ள என் மகன்களும், பாண்டுவின் மகன்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் சஞ்சயா?

सञ्जय उवाच ।
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा ।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् ।। 2।।

sañjaya uvācha
dṛiṣhṭvā tu pāṇḍavānīkaṁ vyūḍhaṁ duryodhanastadā
āchāryamupasaṅgamya rājā vachanamabravīt

சஞ்சயன் சொன்னான்:
பாண்டவர்களின் சேனை, வியூகத்தில் நின்றிருப்பதைக் கண்ட ராஜா துரியோதனன் தன் ஆசிரியரின் அருகில் சென்று இந்த வசனங்களை உரைத்தான்.

पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम् ।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता ।। 3।।

paśhyaitāṁ pāṇḍu-putrāṇām āchārya mahatīṁ chamūm
vyūḍhāṁ drupada-putreṇa tava śhiṣhyeṇa dhīmatā

ஆசிரியரே பாருங்கள், பாண்டவர்களின் மகத்தான சேனை, உங்கள் சிஷ்யனான, துருபதனின் மகனால், மிகுந்த புத்திசாலித் தனத்துடன் வியூகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथ: || 4||

atra śhūrā maheṣhvāsā bhīmārjuna-samā yudhi
yuyudhāno virāṭaśhcha drupadaśhcha mahā-rathaḥ

அங்கு சூரர்களும், சிறந்த வில்லாளிகளும், பீம அர்ஜுனர்களுக்கு சமமாக யுத்தம் செய்பவர்களுமான யுயுதானன், விராடன், துருபதன் போன்ற பெரும் பலம் படைத்தவர்கள் அணி வகுத்துள்ளார்கள்.

धृष्टकेतुश्चेकितान: काशिराजश्च वीर्यवान् |
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गव: || 5||

dhṛiṣhṭaketuśhchekitānaḥ kāśhirājaśhcha vīryavān
purujit kuntibhojaśhcha śhaibyaśhcha nara-puṅgavaḥ

திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், வீரனான புருஜித், குந்திபோஜன், சைப்யன் போன்ற மனிதர்களில் உத்தமர்கள் அணி வகுத்திருக்கிறார்கள்.

युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् |
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथा: || 6||

yudhāmanyuśhcha vikrānta uttamaujāśhcha vīryavān
saubhadro draupadeyāśhcha sarva eva mahā-rathāḥ

யுதாமன்யு, தைரியசாலியான உத்தமௌஜன், வீரனான சௌபத்ரன்(அபிமன்யு), த்ரௌபதர்கள்(திரௌபதியின் புத்திரர்கள்), ஆகிய எல்லா பலவான்களும் அணிவகுத்துள்ளனர்.

अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम |
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते || 7||

asmākaṁ tu viśhiṣhṭā ye tānnibodha dwijottama
nāyakā mama sainyasya sanjñārthaṁ tānbravīmi te

பிராமணர்களில் உத்தமரே, நம் சேனையில் இருக்கக் கூடிய முக்கியமான நாயகர்களையும், நீங்கள் அறிந்து கொள்வதற்காக தெரிவிக்கிறேன்.

भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय: |
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च || 8||

bhavānbhīṣhmaśhcha karṇaśhcha kṛipaśhcha samitiñjayaḥ
aśhvatthāmā vikarṇaśhcha saumadattis tathaiva cha

தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபர், யுத்தத்தை வெல்பவனான அஸ்வத்தாமன், விகர்ணன், சௌமதத்தி(பூரிசிரவஸ்) ஆகியவர்கள் இருக்கிறீர்கள்.

अन्ये च बहव: शूरा मदर्थे त्यक्तजीविता: |
नानाशस्त्रप्रहरणा: सर्वे युद्धविशारदा: || 9||

anye cha bahavaḥ śhūrā madarthe tyaktajīvitāḥ
nānā-śhastra-praharaṇāḥ sarve yuddha-viśhāradāḥ

இன்னும் நிறைய சூரர்கள், எனக்காக ஜீவனை தியாகம் செய்பவர்களாக, எல்லா விதமான அஸ்திரங்களும் படைத்தவர்களாக, யுத்தத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् |
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् || 10||

aparyāptaṁ tadasmākaṁ balaṁ bhīṣhmābhirakṣhitam
paryāptaṁ tvidameteṣhāṁ balaṁ bhīmābhirakṣhitam

பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நம் பலமோ எல்லையற்றதாக இருக்கிறது; பீமனால் காப்பாற்றப்படும் அவர்களின் பலமோ எல்லைக்குள் இருக்கிறது.

अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिता: |
भीष्ममेवाभिरक्षन्तु भवन्त: सर्व एव हि || 11||

ayaneṣhu cha sarveṣhu yathā-bhāgamavasthitāḥ
bhīṣhmamevābhirakṣhantu bhavantaḥ sarva eva hi

எல்லா முக்கியமான அயனங்களிலும் நிற்கும் எல்லோரும், தங்களுடைய பாகங்களை ரக்ஷிப்பதோடு, பீஷ்மரையும் ரக்ஷியுங்கள் எனக் கோருகிறேன்.

तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्ध: पितामह: |
सिंहनादं विनद्योच्चै: शङ्खं दध्मौ प्रतापवान् || 12||

tasya sañjanayan harṣhaṁ kuru-vṛiddhaḥ pitāmahaḥ
siṁha-nādaṁ vinadyochchaiḥ śhaṅkhaṁ dadhmau pratāpavān

அப்போது குரு வம்சத்தின் மூத்தவரான, பிரதாபம் நிறைந்தவரான, பிதாமகர் பீஷ்மர், துரியோதனனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில், தன் சங்கை சிம்ம நாதம் போல், உச்ச ஸ்தாயியில் முழக்கினார்.

तत: शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखा: |
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत् || 13||

tataḥ śhaṅkhāśhcha bheryaśhcha paṇavānaka-gomukhāḥ
sahasaivābhyahanyanta sa śhabdastumulo ’bhavat

அதன் பின், ஒரே நேரத்தில், சங்குகளும், பேரிகைகளும், முரசுகளும், கோமுகங்களும் முழக்கப்பட்டதால் ஏற்பட்ட இரைச்சல் திகைக்கச் செய்வதாக இருந்தது.

तत: श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ |
माधव: पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतु: || 14||
tataḥ śhvetairhayairyukte mahati syandane sthitaumādhavaḥ pāṇḍavaśhchaiva divyau śhaṅkhau pradadhmatuḥ

அதன் பின், வெள்ளை நிற குதிரைகள் கட்டப்பட்ட மகத்தான தேரில் அமர்ந்திருந்த மாதவனும், பாண்டவனான அர்ஜுனனும், தங்களுடைய திவ்யமான சங்குகளை முழக்கினர்.

पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जय: |
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदर: || 15||

pāñchajanyaṁ hṛiṣhīkeśho devadattaṁ dhanañjayaḥ
pauṇḍraṁ dadhmau mahā-śhaṅkhaṁ bhīma-karmā vṛikodaraḥ

ஹ்ருஷீகேஷன்(இந்திரியங்களின் அரசன்) பாஞ்சஜன்யத்தையும், தனஞ்சயன் தேவதத்தத்தையும், மகா சங்கான பௌன்ட்ரத்தை பெருஞ் செயல்கள் புரிபவனும், பெருந் தீனி தின்பவனுமான பீமனும் முழக்கினார்கள்.

अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिर: |
नकुल: सहदेवश्च सुघोषमणिपुष्पकौ || 16||

anantavijayaṁ rājā kuntī-putro yudhiṣhṭhira
nakulaḥ sahadevaśhcha sughoṣha-maṇipuṣhpakau

குந்தியின் புத்திரனான ராஜா யுதிஷ்டிரன் அனந்த விஜயத்தையும், நகுலனும் சகதேவனும் சுகோஷம் மற்றும் மணிபுஷ்பகத்தை முழக்கினர்.

काश्यश्च परमेष्वास: शिखण्डी च महारथ: |
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजित: || 17||

kāśhyaśhcha parameṣhvāsaḥ śhikhaṇḍī cha mahā-rathaḥ
dhṛiṣhṭadyumno virāṭaśhcha sātyakiśh chāparājitaḥ

பெரும் வில்லாளியான காசி ராஜனும், மஹா ரதனான சிகண்டியும், த்ரிஷ்டத்யும்னனும், விராடனும், வெல்ல முடியாத சாத்யகியும்

द्रुपदो द्रौपदेयाश्च सर्वश: पृथिवीपते |
सौभद्रश्च महाबाहु: शङ्खान्दध्मु: पृथक् पृथक् || 18||

drupado draupadeyāśhcha sarvaśhaḥ pṛithivī-pate
saubhadraśhcha mahā-bāhuḥ śhaṅkhāndadhmuḥ pṛithak pṛithak

துருபதன், த்ரௌபதேயர்கள், பெருந் தோள்களைக் கொண்ட சௌபத்ரன்(அபிமன்யு) ஆகிய அரசர்கள், தத்தம் சங்குகளை தனித்தனியாக முழக்கினர்.

स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् |
नभश्च पृथिवीं चैव तुमुलोऽभ्यनुनादयन् || 19||

sa ghoṣho dhārtarāṣhṭrāṇāṁ hṛidayāni vyadārayat
nabhaśhcha pṛithivīṁ chaiva tumulo abhyanunādayan

அந்த பேரிரைச்சல் ஆகாயத்திலும் பூமியிலும் இடி போல் எதிரொலித்து, தார்தராஷ்டிரர்களின் இதயங்களை நடுங்கச் செய்து விட்டது.

अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वज: |
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डव: ||20||
हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते |

atha vyavasthitān dṛiṣhṭvā dhārtarāṣhṭrān kapi-dhwajaḥ
pravṛitte śhastra-sampāte dhanurudyamya pāṇḍavaḥ
hṛiṣhīkeśhaṁ tadā vākyam idam āha mahī-pate

அரசே, அப்பொழுது, வானரக் கொடியுடையவனான பாண்டவன் அர்ஜுனன், தம்மிடமுள்ள அஸ்திரங்களை உபயோகிக்கத் தயாராக வரிசையாக நின்ற தார்தராஷ்டிரர்களைப் பார்த்தவுடன், தன் வில்லை எடுத்துக் கொண்டு ஹ்ருஷீகேசனிடம் இவ்வாறு சொன்னான்:
 
अर्जुन उवाच |
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत || 21||
यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् |
कैर्मया सह योद्धव्यमस्मिन् रणसमुद्यमे || 22||

arjuna uvācha
senayor ubhayor madhye rathaṁ sthāpaya me ’chyuta
yāvadetān nirīkṣhe ’haṁ yoddhu-kāmān avasthitān
kairmayā saha yoddhavyam asmin raṇa-samudyame

அர்ஜுனன் சொன்னான்:
அச்சுதா, இரண்டு சேனைகளுக்கு நடுவிலும் ரதத்தை நிறுத்து; இந்த ரண களத்தில், யுத்தத்திற்கு தயாராய் நிற்கும் யாரோடெல்லாம் நான் யுத்தம் செய்ய வேண்டும் என்று நான் பார்க்க வேண்டும்.

योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागता: |
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षव: || 23||

yotsyamānān avekṣhe ’haṁ ya ete ’tra samāgatāḥ
dhārtarāṣhṭrasya durbuddher yuddhe priya-chikīrṣhavaḥ

தார்த்தராஷ்ட்ரனின் துர்புத்திக்கு இணங்கி அவனை மகிழ்விப்பதற்காக, யுத்தம் செய்வதற்குத் தயாராய், யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க விருப்பப்படுகிறேன்.

सञ्जय उवाच |
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत |
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् || 24||

sañjaya uvācha
evam ukto hṛiṣhīkeśho guḍākeśhena bhārata
senayor ubhayor madhye sthāpayitvā rathottamam 

சஞ்சயன் சொன்னான்:
பரதனின் வம்சத்தில் பிறந்தவனே, இவ்வாறு குடாகேஷனால்(உறக்கத்தை வென்றவனான அர்ஜுனனால்) சொல்லப்பட்ட ஹ்ருஷீகேஷன், இரண்டு சேனைகளுக்கு நடுவில் அந்த உத்தமமான ரதத்தை நிறுத்தினான்.

भीष्मद्रोणप्रमुखत: सर्वेषां च महीक्षिताम् |
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति || 25||

bhīṣhma-droṇa-pramukhataḥ sarveṣhāṁ cha mahī-kṣhitām
uvācha pārtha paśhyaitān samavetān kurūn iti

பின் பீஷ்மர், துரோணர், போன்ற முக்கியஸ்தர்கள் மற்றும் மன்னர்கள் முன்னிலையில் சொன்னான்: 'பார்த்தனே, இங்கு குழுமியிருக்கும் இந்த குரு வம்சத்தினரைப் பார்' என்று.