விழுங்கியது

என் பின்னால்
என் போல்
பல மடங்கு பெரிதாய்

என்னை விழுங்கியபடி

கொம்புகள் முளைத்து
வால் நீண்டிருக்கும்

கோரைப் பற்களைக் 
காட்டிச் சிரிக்கும்

கருத்த

எதைக் கண்டதால் 

உன் கண்கள்
பயம்
கொள்கின்றன