என் படகு

இன்று
என் ஜன்னலோரத்தில்
எனக்காய்
வந்து
நின்றிருக்கிறது 
இப்படகு

அத்தனைப் பெரிய
கடலிருக்க
எனக்கென
ஒளி வீசியபடி
எனக்கென்றே
வந்து 
நின்றிருக்கிறது
அது

கருத்த
இரவு 
முழுதும்
எனக்குத்
துணையாய் இருக்கப் போகும்
எனக்கே எனக்கான
என் படகு