அஷ்டபதி 18-ஹரிரபிஸரதி..(மாதவே..)

ஸ்லோகம்:
तामथ मन्मथखिन्नाम् रतिरसभिन्नाम् विषादसम्पन्नाम्।
अनुचिन्तितहरिचरिताम् कलहान्तरितमुवाच सखी॥ 
அததாம் மன்மத கின்னாம் ரதி ரஸ பின்னாம்
விஷாத ஸம்பன்னாம்
அனுசிந்தித ஹரி சரிதாம் கலஹாந்தரிதம்
உவாச ரஹஸி ஸகீ
மன்மதனால் காயப்படுத்தப்பட்ட, ரதி சுகத்திலிருந்து பிரிக்கப்பட்ட, துக்கத்தால் பீடிக்கப்பட்ட, ஹரியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த கலஹாந்தரிதையான (கலகத்திற்கு பிறகு துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நாயகி) அந்த ராதையிடம் தோழி ரகசியாமாகச் சொன்னாள்.

हरिरभिसरति वहति मधुपवने।
किमपरमधिकसुखम् सखि भवने।
ஹரிரபி ஸரதி வஹதி மது பவனே
கிமபரம் அதிக ஸுகம் ஸகி பவனே
தோழி, வஸந்த கால் காற்று வீசும் போது ஹரி கட்டாயம் வருவான். அதன் பின்னர் உனக்கு அதை விட அதிகம் வேறு என்ன சுகம் இருக்க முடியும்

माधवे मा कुरु मानिनि मानमये - धृवम्॥
மாதவே மாகுரு மானினி மானம் அயே ஸகி (த்ருவம்)
ஓ கர்வம் நிறைந்த தோழியே, நீ மாதவனிடம் அதிக கர்வத்தை காட்டாதே

तालफलादपि गुरुमतिसरसम्।
किम् विफलीकुरुषे कुचकलशम्॥
தாள பலா தபி குரும் அதி ஸரஸம்
கிமு விபலீ குருஷே குச கலஸம் (மாதவே)
பனம் பழத்தை விட பெரிதானதும், அதிக ரசம் நிரம்பியதுமான உன் மார்புகளை ஏன் வீணடிக்கிறாய் (மாதவே)

कति न कथितमिदम् अनुपदम् अचिरम्
मा परिहर हरिम् अतिशय रुचिरम् (माधवे)
கதி ந கதிதமிதம் அனுபதம் அசிரம்
மா பரிஹர ஹரிம் அதிசய ருசிரம் (மாதவே)
அதிசயமான இனிமை மிகுந்தவனான ஹரியை வேண்டாமென்று சொல்லாதே; அதிக காலமாகவில்லை, ஒவ்வொரு நிலையிலும் பல முறை உன்னிடம் இவ்வாறு நான் சொல்லி..

किमिति विषीदसि रोदिषि विकला।
विहसति युवतिसभा तव सकला॥
கிமிதி விஷீதஸி ரோதிஷி விகலா
விஹஸதி யுவதி ஸபா தவ ஸகலா (மாதவே)
ஏன் இவ்வாறு துக்கப்படுகிறாய், அழகின்றி அழுகிறாய்; யுவதி சபையில் இருக்கும் அனைவரும் உன்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்(மாதவே)

सजलनलिनीदलशीतलशयने।
हरिमवलोक्य सफल नयने॥
ஸஜலநளினீ தள ஷீதல ஸயனே
ஹரீம் அவலோக்ய ஸபல நயனே (மாதவே)
நீருடன் கூடிய குளிர்ந்த தாமரை இலைகளாலான சயனத்தில், ஹரியை மனக்கண்ணில் பார்த்தால் தான், உன் கண்ணிருப்பதற்கான பலன் கிட்டும் (மாதவே)


जनयसि मनसि किमिति गुरुखेदम्।
शृणु मम वचनमनीहितभेदम्॥
ஜனயஸி மனஸி கிமிதி குரு கேதம்
ஸ்ருணுமம வசனம் அனீஹித பேதம் (மாதவே)
உன் மனத்தில் ஏன் இத்தனை அதிக துயரத்தை உண்டாக்கிக் கொள்கிறாய்; என் சொற்களை கேள்; உங்கள் இருவர் இடையே இருக்கும் பிரிவை முடிவுக்கு கொண்டு வா

हरिरुपयातु वदतु बहुमधुरम्।
किमिति करोषि हृदयमतिविधुरम्॥ 
ஹரிருபயாது வதது பஹுமதுரம்
கிமிதி கரோஷி ஹ்ருதயம் அதிவிதுரம் (மாதவே)
ஹரி உன்னிடம் வந்து எவ்வளவு இனிமையாக பேசுகிறான்; ஏன் இவ்வாறு உன்னுடைய இதயத்தை அதிக துக்ககரமாக ஆக்கிக் கொள்கிறாய்.

श्रीजयदेवभणितमतिललितम्।
सुखयतु रसिकजनम् हरिचरितम्॥
ஸ்ரீஜய தேவ பணிதம் அதி லலிதம்
ஸுகயது ரஸிக ஜனம்  ஹரி சரிதம் (மாதவே)
ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட மிக மென்மையான, நுட்பமான இந்த ஹரியின் சரித்திரம் ரசிக ஜனங்களுக்கு அதிக சுகத்தை அளிக்கட்டும்.