இடைபடாதபடி..

அவருசியாய்

நீட்டிக் கொண்டிருந்தது 
அது

காணாதது போல்

அங்கே
இல்லவே இல்லாதது போல்

எல்லாம்
சுழன்று கொண்டிருந்தன
தத்தம்
அச்சில் 

அதன்
வட்டத்தில்
இடைபடாதபடி
எச்சரிக்கையாய்