கல்லறைப் பூ

மணம் கிட்ட
சொக்கிப் போனேன்

பூத்திருந்தன
அம்மலர்கள்

என் கல்லறை மேட்டின் மேல்..

யாரும் பார்க்கும் முன்

அவசரமாய்
பறித்தெறிந்து

மிதித்து
புதைத்துவிட்டு

கடந்து செல்கிறேன்

கல்லறையில்
பூப்பவை

அகம் அன்றோ