அருகிருப்பவை..

கண்களையும்
மூக்கையும்
பிழிந்து பிழிந்து

தொப்பலாகிப் போன
ஆடையை நீக்குகிறேன்

ஓங்கி உதைத்ததால்
உடைந்த
பூ ஜாடியை
அள்ளிக் கொட்டுகிறேன்

கன்னிப் போன
கைகளுக்கு
தைலமிடுகிறேன்

குரூரமாய்
மீண்டும்
உடைபடாதிருக்க

அருகிலிருப்பவற்றை
தூர விலக்கி வைத்து விட்டு

பெருங்கேவலுடன்
அன்றைக்கான
துயில் கொள்ள
முயல்கிறேன்