ஒரே கணம்

மேகத்தின் மேலேறி
இசைத்தபடி

ஆழ்கடலின் மௌனத்தில்
அசையாது

மலையுச்சியின்
ஒற்றை மர நிழலில்
வானைப் பார்த்த படி

கழுகின் சிறகு நுனியில்
எதிர் காற்றை
நுகர்ந்தபடி

காலத்திலிருந்து காலம்
உலகத்திலிருந்து உலகம்

கணத் தொலைவு தான்