சுமை

தோற்பவனுக்குத் தெரியும்

தோல்வி
ஒன்றும் புதிதல்ல

சந்தேகமுமில்லை

நினைத்து நினைத்து
மேலும் தோற்கிறான்

நினைப்பதாலேயே
தோற்கிறான்

எதுவும்
அறியாது

ஏனென்றும் தெரியாது

ஆற்றவொண்ணாததாய்

மிக மிகச் சூடானதாய்

வடித்துக் கொண்டிருப்பவள்

சுமப்பவள்