அத கதமபி யாமினீம் வினீய
ஸ்மரஸர ஜர்ஜரி தாபி ஸா ப்ரபாதே
அனுநய வசனம் வதந்தம் அக்ரே
ப்ரண தமபி ப்ரியமாஹ ஸாப்யஸூயம்
மன்மதனின் அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்த இரவை எப்படியோ தனிமையிலேயே கழித்து விட்ட ராதை, காலையில் அவள் முன் வந்து கையைக் கூப்பிக் கொண்டு, தன்னை மன்னிக்கும்படி கேட்ட தன் காதலனிடம், பொறாமை நிறைந்த வார்த்தைகளைச் சொன்னாள்.(கண்டித நாயகி பாவம்)
ரஜனி ஜனித குருஜாகர ராக கஷாயிதமலஸ நிமேஷம்
வஹதி நயனம் அனுராகமிவஸ்புடம் உதித ரஸாபி நிவேஸம்
இரவில் நெடுநேரம் விழித்ததாலும், காமத்தினாலும், சிவந்த உன் கண்கள் மெல்ல தாமாகவே அடித்துக் கொள்கின்றன; உன் கண்கள் தெளிவாக அவள் மீதான காதலை சுமந்து கொண்டிருக்கின்றன.
யாஹி மாதவ யாஹி கேசவ மாவத கைதவ வாதம்
தாமனுஸர ஸரஸீருஹ லோசன யா தவ ஹரதி விஷாதம்(ஹரி,ஹரி)
சென்று விடு மாதவா, சென்று விடு கேசவா, உன் பொய்ச் சொற்களை சொல்லாதே; தாமரை போன்ற கண்களை உடையவனே, யார் உன்னுடைய சோகத்தை தீர்க்கிறாளோ அவள் பின்னாலேயே சென்று விடு, ஹரிஹரி..
கஜ்ஜள மலின விலோசன சும்பன விரசித நீலிமரூபம்
தஸன வஸனமருணம் தவ க்ருஷ்ண தனோதி தனோரனு ரூபம் (யாஹி)
மையிடப்பட்டு கருத்த கண்களை முத்தமிட்டதால், பற்களின் ஆடையான உன் சிவந்த உதடுகளில் தீற்றிய கருமை, உன் கருத்த மேனியை இன்னும் எடுத்துக்காட்டுகிறது (சென்று விடு..)
வபுரனுஸரதி தவ ஸ்மர ஸங்கர கர நகர க்ஷத ரேகம்
மரகத ஸகல கலித கலதௌத லிபேரிவ ரதிஜய லேகம் (யாஹி)
மரகதத்தில் உள்ள பொன் ரேகைகளைப் போல, உன் உடலில் நகங்கள் கீறியதால் ஏற்பட்ட வடுக்கள் இருக்கின்றன; அவை மன்மதனின் போர்களத்தில் உனக்குண்டான ரதி வெற்றியை குறிக்கும் எழுத்துக்களோ என்று தோன்றுகிறது.(சென்று விடு..)
சரண கமல கள தலக்தக ஸிக்தம் இதம் தவ ஹ்ருதயம் உதாரம்
தர்ஸய தீவ பஹிர் மதனத்ரும நவ கிஸலய பரிவாரம் (யாஹி)
உன் பரந்த மார்பில், (ஏதோ ஒரு பெண்ணின்)தாமரை போன்ற பாதங்களிலிருக்கும் சிவந்த நிறம்(அல்கா) தீற்றியிருக்கிறது; இக்காட்சி, மன்மத மரத்தின் மீது பொலிந்திருக்கும் புதிய சிவந்த தளிர்களைப் போல் தெரிகிறது(சென்று விடு..)
தஸன பதம் பவ ததரகதம் மம ஜனயதி சேதஸிகேதம் கதமதுனாபி மயாஸஹ தவ வபுரே ததபேதம் (யாஹி) உன் உதடுகளில் ஏற்பட்டுள்ள இந்த கடித் தடம் என் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது; எப்படி இப்போது கூட உன் உடலும் என் உடலும் தனித்தனியானவை அல்ல என்ற அபேதம் எனக்குத் தோன்றுகிறது(ராதாமாதவம்), (சென்று விடு..)
பஹிரிவ மலின தரம் தவ க்ருஷ்ண மனோபி பவிஷ்யதி நூனம்
கதமத வஞ்யஸே ஜனம் அனுகதம் அஸம ஸர ஜ்வர தூனம் (யாஹி)
ஓ கிருஷ்ணா, உன் மனம் உன் உடலைக் காட்டிலும் மலினமாகத் தான் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால், மன்மதனின் அம்புகளால் பீடிக்கப்பட்டு, ஜுரத்துடன் உன் பின்னாலேயே வரும் ஜனங்களை எப்படி இவ்வாறு வஞ்சிக்க முடியும். (சென்று விடு..)
ப்ரமதி பவான பலா கபளாய வனேஷு கிமத்ர விசித்ரம்
ப்ரதயதி பூதனிகைவ வதூவத நிர்தய பால சரித்ரம் (யாஹி)
நீ இது போன்ற அபலைப் பெண்களை கபளீகரம் செய்வதற்கே வனங்களில் சஞ்சரிக்கிறாய்; ஆனால் இதிலென்ன வினோதம்; பூதனை போன்ற பெண்களை இரக்கமில்லாமால் கொல்பவன் தான் நீ என்று உன் பால சரித்திரமே தான் சொல்கிறதே(சென்று விடு..)
ஸ்ரீ ஜயதேவ பணித ரதி வஞ்சித கண்டித யுவதி விலாபம் ஸ்ருணுத ஸுதா மதுரம் விபுதா வததாபி ஸுகம் ஸுதுராபம் (யாஹி) ஓ புத்திமான்களே, ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட, தேனினும் இனிய, கேட்கக் கிடைப்பதற்கு அரிதான, ரதியால் வஞ்சிக்கப்பட்ட, கண்டித யுவதியின் இப்புலம்பலை கேளுங்கள்.