கவனமாய்

மழை பெய்த இரவுக்குப் பின்

இன்னும் விடியாத கருக்கிருட்டில்

வெற்றுக் கால்களில் தான் என்றாலும்

தேங்கியிருக்கும் குட்டைகளில்
கால் வைக்காது
கவனமாய்

பூ மாலையை நெஞ்சோடணைத்தபடி
எப்படியும் சென்று சேர்ந்து விட வேண்டியது தான்