சுவடு

கண்களை மூடித்
திறந்த போது

ஒருவரும் அங்கில்லை
கன்று காலிகளும் தான்

சுவடு கூட இல்லை

மரம்
தூரத்து மலை 
அதன் மேல் 
தொங்கிக் கொண்டிருந்த முகில்
எதன் மீதும்..

எச்சுவடும் 
எதன் மீதும்
எப்போதும்
ஏறாத
அப்பாதைகளில்..

என் கன்றுகளைத் தேட
மீண்டும்
ஆரம்பிக்கிறேன்

நன்றியோடு