
நெட்டையாய் குள்ளமாய் இடுப்பில் கை வைத்தபடி கால் பரப்பி சற்றே சாய்ந்து ஒயிலாய் கைக்கடக்கமாய் தலை தட்டாது நிற்க வாகாய் அட்டணக்காலிட்டு அடிமரத்தில் சாய்ந்து புல்லாங்குழலிசைக்க தோதாய் புல் பூண்டுக்கும் இடம் தராது முழுக்கக் கிளை பரப்பி எல்லாவற்றையும் உறிஞ்சிக் குடிக்கும் பேயாய் எல்லா விதமாயும் தான் இருக்கிறது என் தோட்டத்தில்