என்னிலா..

பார்த்தபடி
அமர்ந்திருக்கிறேன்

இருப்பிலும்
இன்மையிலும்

ஓய்வின்றி
சலிப்பின்றி

கணந்தோறும் மாறியபடி

ஒன்றே போல்

சென்று கொண்டேயிருக்கிறாள்

சட்டென
அவள்
உதட்டோரத்தில்
ஒரு சிறு
சுழிப்பு

எனைப் பார்த்தா

என்னிலா..