பூந்தூவல்

மீண்டும் மீண்டும்
ஒன்றையே சொல்கிறாய்
அதுவும் 
சன்னமாக..

முகம் திருப்பிக் கொள்கிறான்

சிலுசிலுவென
மென் மணலை
புளகம் கொள்ளச் செய்த
பூந்தூவலிடம்