ஸ்லோகம்:
நாயா தஸ்ஸகி நிர்தயோ யதிஸட: த்வம் தூதி கிம் தூயஸே
ஸ்வச்சந்தம் பஹுவல்லவ: ஸ ரமதே கிம் தத்ரதே தூஷணம்
பஸ்யாத்ய ப்ரியஸங்கமாய தயிதஸ்ய ஆக்ருஷ்யமாணம் குணை:
உத்கண்டார்த்திபரா திவஸ் புடதி தம் சேத: ஸ்வம்யாஸ்யதி
அந்த காமுகன் தயையின்றி வராமலிருந்தால், எனக்கு தூது செல்பவளான நீ ஏன் துக்கம் கொள்கிறாய்; நிறைய காதலிகளைக் கொண்டவனான அவன் தன் சொந்த இச்சையால் அவர்களோடு கூடி சந்தோஷிக்கிறான், அதில் உனக்கேன் இத்தனை வெறுப்பு; ஆயினும் பார், பிரியமானவனுடன் சங்கமிக்க, அவன் குணங்களால் ஈர்க்கப்பட்டு, வெடித்துவிடுமளவு, மிகுந்த துக்கத்தினால் பீடிக்கப்பட்ட இவ்விதயம் தானாகவே அவனை நோக்கி நகர்வதை.
அனில தரள குவலய நயநேன
தபதி ந ஸா கிஸலய ஸயனேன
காற்றினால் அசைந்தாடும் தாமரை மலர் போன்ற அவன் கண்களினால் பார்க்கப்படும் எவள் ஒருத்தியும், தளிர்களாலான படுக்கையில் வேதனை கொள்வதில்லை.
யா ரமிதா வனமாலினா ஸகி
தோழி, எவள் ஒருத்தி வனமாலை அணிந்தவனால் சந்தோஷப் படுத்தப் படுகிறாளோ, அவள்..
விகஸித ஸரஸிஜ லலித முகேன
ஸ்புடதி ந ஸா மனஸிஜ விஸிகேன (யா ரமிதா)
மலர்ந்த தாமரை மலர் போன்ற அழகிய முகம் கொண்ட அவனால், அவள் மன்மதனின் அம்புகளுக்கு இரையாவதில்லை.
அம்ருத மதுர ம்ருதுதர வசனேன
ஜ்வலதி ந ஸா மலயஜ பவனேன (யா ரமிதா)
அமுதம் போன்ற இனிய, மென்மையான அவன் சொற்களால், அவள் மலையிலிருந்து வீசும் மென்மையான காற்றினால் எரிவதில்லை.
ஸ்தல ஜலருஹ ருசிகர சரணேன
லுடதி ந ஸா ஹிமகர கிரணேன (யா ரமிதா)
நிலத்தில் பூக்கும் தாமரையைப் போன்ற அழகிய பாதங்களையுடையவனால், குளிர் தரும் கிரணங்களால் அவள் பீடிக்கப் படுவதில்லை.
ஸஜல ஜலத ஸமுதய ருசிரேண
தளதி ந ஸா ஹ்ருதி விரஹ பரேண (யா ரமிதா)
நீர் சுமந்திருக்கும் மேகங்களின் ஒளியைக் கொண்டிருப்பவனால், அவள் இதயம் விரகத்தால் நிறைவதில்லை.
கனக நிசய ருசி ஸுசி வஸனேன
ஸ்வஸிதி ந ஸா பரிஜன ஹஸனேன (யா ரமிதா)
பொன் போன்ற ஒளி கொண்ட சுத்தமான ஆடை பூண்டவனாக அவன் இருப்பதால், அவள் தன்னை சுற்றியிருப்பவர் பரிகாஸம் செய்தாலும் துக்கம் கொள்வதில்லை.
ஸ கல புவன ஜ ன வர தருணேன
வஹதி ந ஸா ருஜம் அதி கருணேன (யா ரமிதா)
எல்லா உலகங்களிலும் சிறந்த இளைஞனான அவனின் மிகுந்த கருணையினால், அவள் ஒரு போதும் எந்த வலியையும் அனுபவிக்க மாட்டாள்.
ஸ்ரீ ஜய தேவ பணித வசனேன
ப்ரவிஸது ஹரிரபி ஹ்ருதயம் அனேன (யா ரமிதா)
ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட இந்த வசனங்களால் , எல்லோருடைய மனதிலும் ஹரி நுழைவாராக.