ஓட்டம்

இடித்துக் கொண்டும்
உரசிக் கொண்டும்
அன்னையின்
கால்களையே
பார்த்த படியே
ஓடின
குஞ்சுகள்

இடம் போனால் இடம்
வலம் போனால் அதுவே

பெயரெடுக்க
வேகமாய் முன் சென்ற
சில

திரும்பித் திரும்பி

பார்த்துக் கொண்டே
சென்றன

சட்டென
நின்றது
அன்னை

ஒன்றின் மீது
மற்றொன்றேற

பின்
சமாளித்துக் கொண்டன

மிக முன் சென்று விட்டவை
வந்து சேர்ந்து கொள்ள

பின் தங்கியவை
மொய்க்க
மொய்க்க

மீண்டும்
ஆரம்பமானது
அன்னையின்
ஓட்டம்

காலங் காலமாய்