நீ அறிவது

நான் அறியும் மணமே
நீ அறிவதும்

எனக்குத் தெரியும் வர்ணம் தான்
உனக்கும் அச்சு அசலாய் 
அவ்வாறே
தெரிகிறது

அன்பே

நாம் இருவரும் ஒருவரே

இதை

உனக்கு
நான்
வேறெப்படிச் சொல்வது