இங்கிருந்து..

இங்கிருந்து பார்க்கையில்

சுழிகளோ
அலைகளோ
இல்லை

ஓரத்தில் ஒரு வரி
நுரை மட்டுமே

ஆழமோ
ஆபத்தோ

எதுவும் இல்லை

மேலும் கீழுமாய்
எங்கும் 
ஒரே மட்டமாய்
நீலம் மட்டுமே