அக்கண்கள்

மெல்ல அதன் கழுத்தை வருடுகிறேன்
காதுகளையும்
வயிற்றையும்

கால்களில்
அதன்
ஈர மூச்சு

கூசுகிறேன்

சுற்றிச் சுற்றி
வருகிறது

அணைத்து முத்தமிடுகிறேன்

சில நொடிகள் முன்

வயிற்றிலேயே
ஒன்று
ஓங்கி விட்டதும்
'உழ், உழ்' என்று
முனகிய படி
மூலைக்கு சென்று
சுருண்டு படுத்த
அதை