இன்னதென்று..

இன்னதென்றறியாது
பொங்கப் பொங்க

எதிர் காற்றில்
முகம் அலைய
விரித்த உதடுகளோடு
ஜிவ்வென்று உயர எழும்பி
எடையற்றவளாய்
மிதந்து மிதந்து
சிறகுகளால்
வானத்தை அளக்கிறேன்

பின்
இனிக்க இனிக்க

ஒழிந்த முட்டையின்
ஓட்டுக்குள்
கை கால் ஒடுங்க
அடுக்கடுக்காய் புதைந்து
சுருளுக்குள் சுருளென

அணுவென்றாகி
கரைந்தே அழிகிறேன்