அவனென்றானவை..

மிகப் பெரும் கையொன்று
முச்சே விட முடியாத படி
அழுத்திப் பிசைகிறது
நெஞ்சை

காலோ
தரையோடு தரையாக
நசுக்கித் தேய்க்கிறது
புழுவை

துள்ளும் துடிக்கும்
உடலை
வாயிலிட்டு
சவைத்து
உண்கிறான்
அரக்கன்

கோரைப் பற்களில்
அமர்ந்திருக்கும்
ஒட்டுண்ணிக்கோ
கொண்டாட்டம்

கிழித்துண்ணும்
உடல்களின்
ரத்தமுண்டு
கொழுக்கிறது

பெருகி
இன்னுமின்னுமென

அவனையும்
உண்டு
அவனென்றேயாகி

அவனையும் மிஞ்சுகின்றன

கொழுத்த ஒட்டுண்ணிகள்