வாசம்

மொக்கொன்று
மலரும் நொடியில்
பறக்கத் துவங்குகிறது

ஒரு
துளி
வாசமாய்

தன்
ஆன்மாவின்
ஊர்தியாய்