எதிர் புன்னகை

உனக்குத் தான்
எத்தனை வாய்கள்
எத்தனை புன்னகைகள்

நல்லது

உள்ளறையின்
சிறு வாயில்
கொஞ்சமாவது
இன்னும்
திறந்திருக்கும் வரை

வெளிச்சம் 
இன்னும்
ஒரு துளி
மிச்சமிருக்கையில்

உன் புன்னகைக்கு
எதிர் புன்னகை செய்து
காலத்தை
கழித்துக் கொள்கிறேன்