ஆழமாய்..

கிடைத்த
அரை நொடியில்

இந்நறுமணத்தை
ஆழ
சுவாசித்துக் கொள்கிறேன்

துளி இனிப்பை
ஆழ
சுவைத்துக் கொள்கிறேன்

துளை வழி 
மலர் காட்சியை
ஒத்தி சேமித்துக் கொள்கிறேன்

உன்னை
ஆழமாய் 
முத்தமிட்டுக் கொள்கிறேன்

எனக்கு
வாய்ப்பதெல்லாம்
அரை நொடிகள்
மாத்திரமே

நீள் சுரங்கத்தின் இப்புறத்திலிருந்து..