ஆழ சுவைக்கிறேன்

வேண்டாம்
எனக்குப் பழக்கமில்லை

ஏசினால்
பழி சொன்னால்
பல விதமாய்
பெயர் சொல்லி அழைத்தால்

கண்மூடி
செவி கேளாதென
பல்லைக் கடித்தபடி
கடந்து 

என் வழியில்
செல்ல
பயின்றிருக்கிறேன்

ஆனால்
இது எனக்கு புதிது

எதற்கும்
ஒரு முறை

மெல்ல 
என்னைச்
சொல்கிறேன்

உம் செவியில்
விழும் முன்

அரை நொடி

இவ்வினிப்பை
எனக்கென
ஆழ
சுவைத்துக் கொள்கிறேன்