இனியவள்

வெறுக்கப் படுகிறாள்
தள்ளி வைக்கப் படுகிறாள்
வெளியேற்றப் படுகிறாள்

பழி சொல்லப் படுகிறாள்
பெயர்களால் அழைக்கப் படுகிறாள்

மெல்ல மெல்ல
காணாமலாக்கப் படுகிறாள்

யார் கண்ணிலும்
படாமல்
கொஞ்சமாய்
இனிப்பை
அள்ளி
வாயிலிட்டு
அதக்கிக் கொண்டு
மேலும்
முன் செல்கிறாள்

இனியவள்