அஷ்டபதி 13-கதித ஸமயே..(யாமி ஹே..)

ஸ்லோகம
அத்ராந்தரே ச குலடாகுல வர்த்ம காத
ஸஞ்ஜாத பாதக இவ ஸ்புடலாஞ்சன ஸ்ரீ:
ப்ருந்தாவனாந்தரம் அதீபயத் அம்ஸுஜாலை:
திக்ஸுந்தரீ வதன சத்தன பிந்துரிந்து:
ப்ரஸரதி ஸஸதர பிம்பே விஹித விளம்பே ச மாதவே விதுரா
விரசித விவித விலாபம் ஸா பரிதாபம் சகாரா உச்சை:

அதற்குள், மகளிரின் பாதையில் தடையாக வந்ததால், உண்டான காயம் போன்ற கரும்புள்ளிகளை சுமந்த நிலவின், கிழக்கு திக்கு என்னும் அழகிய சுந்தரியின் நெற்றியில் அணிந்த சந்தனப் பொட்டைப் போன்ற நிலவின், ஒளிக்கிரணங்களால் பிருந்தாவனம் ஒளி கொள்ளத் தொடங்கியது.

முயல் அமர்ந்த முகம் கொண்டவன் கூட பிரகாசிக்கத் துவங்கி விட்ட போதும் மாதவன் வரவில்லையாதலால், துயரம் கொண்ட ராதை, பல விதமாக பிரலாபம் செய்ய ஆரம்பித்தாள், மிகப் பரிதாபமான நிலைக்கு ஆளானாள்.

கதித ஸமயேபி ஹரி: அஹஹ ந யயௌ வனம்
மம விபலமிதமமல ரூபமபி யௌவனம்

சொன்ன நேரத்தில் ஹரி இந்த வனத்துக்கு வரவில்லை, என் குற்றமற்ற அழகிய இளமையான ரூபமும் பயனற்றுப் போனது.

யாமிஹே கமிஹ ஸரணம் ஸகீஜன வசன வஞ்சிதாஹம் (யாமி)

அஹோ, இங்கு யாரிடம் சரணடைவேன், நான் தோழிகளின் சொற்களினால் வஞ்சிக்கப்பட்டவள்

யதனு கமனாயநிஸி கஹனம்பி ஸீலிதம்
தேன மம ஹ்ருதய மிதம் அஸமஸர கீலிதம் (யாமி)

யாரைப் பின்தொடர இரவு என்றும் பாராமல், வனத்தில் தேடி அலைந்தேனோ, அவனால் என் மனம் இவ்வாறு, பார்க்க முடியாத அம்புகளால் கிழிக்கப்பட்டது.

மம மரணமேவரம் அதிவிதத கேதனா
கிமிதி விஸஹாமி விரஹானலம் அசேதனா (யாமி)

இவ்விடம் சோபை இழந்து விட்டது, விரஹம் என்னும் அனலால் நான் உயிரற்றவள் போல் இருக்கிறேன், ஏன் இவ்வாறு சகித்துக் கொள்ள வேண்டும், என் மரணமே சிறந்தது.

அஹஹ கலயாமி வலயாதி மணி பூஷணம்
ஹரிவிரஹ தஹன வஹனேன பஹுதூஷணம் (யாமி)

அஹோ, இந்த வளையல்களும், மற்ற அருமணிகள் பதிக்கப்பட்ட பூஷணங்களும், ஹரியின்றி இருக்கும் விரஹத்தால், சுடுகின்றன, சுமந்தலைவது மிகக் கடினமாக இருக்கிறது.

மாமிஹ ஹி விதுரயதி மதுர மதுயாமினீ
காபி ஹரிமனுபவதி க்ருத ஸுக்ருத காமினீ (யாமி)

இந்த இனிய வசந்த கால இரவில் நான் மிகுந்த துயர் கொண்டிருக்க, எதோவொரு புண்ணியம் செய்த அழகி ஹரியை அனுபவித்துக் கொண்டு இருப்பாள்

குஸும ஸுகுமாரதனும் அஸமஸர லீலயா
ஸ்ரகபி ஹ்ருதி ஹந்திமாம் அதி விஷம ஸீலயா (யாமி)

இந்த மலர் மாலை கூட, தன் அதிக விஷம் கொண்ட நடத்தையால் என் இதயத்தை கொல்கிறது; மலரைப் போன்ற மென்மையான என் உடலை மன்மதனின் பாணங்கள் முன்பே கொன்று விட்டன

அஹமிஹஹி நிவஸாமி ந விகணித வேதஸா
ஸ்மரதி மதுஸூதனோ மாமபி ந சேதஸா (யாமி)

இது வேதஸ மரம் என்றும் எண்ணாமல் நான் இங்கு வசிக்கிறேன்; மதுஸுதனனோ மனதாலும் என்னை நினைக்கவில்லை

ஹரிசரண ஸரண ஜயதேவகவி பாரதீ

வஸது ஹ்ருதி யுவதிரிவ கோமள கலாவதீ(யாமி)

ஹரியின் பாதங்களையே சரணடைந்த கவி ஜயதேவரின் இவ்வார்த்தைகள், கோமள கலாவதியாக யுவதியாக இதயங்களில் வாழட்டும்.