அஷ்டபதி 12-நாத ஹரே..(பஷ்யதி திஷி திஷி..)

ஸ்லோகம்
அததாம் கந்தும் அஸக்தாம் சிரம்
அனுரக்தம் லதாக்ருஹே த்ருஷ்ட்வா
தச்சரிதம் கோவிந்தே மனஸிஜ
மந்தே ஸகீ ப்ராஹ

ராதையைப் பார்த்துவிட்டு, திரும்பிச் செல்ல மனதில்லாமல், வெகு நேரம் கொடிவீட்டிலேயே தயங்கி தயங்கி நின்ற தோழி, பின் மனம் பிரமித்திருக்கும் கோவிந்தனிடம் வந்து சொல்ல ஆரம்பித்தாள்:

பஸ்யதி திஸி திஸி ரஹஸி பவந்தம்
த்வததர மதுர மதூனி பிபந்தம்

உன்னிடமிருந்து தேனைப் போன்ற இனிய அதர பானத்தை பருகிக் கொண்டே, அவள் திசை திசையாக, ரகசியமாக உன்னைத் தேடுகிறாள்.

நாத ஹரே ஜகன்னாத ஹரே
ஸீததி ராதா வாஸ க்ருஹே (நாத)

உலகுக்கெல்லாம் நாதனே, பாவங்களை போக்குபவனே, ஹரி , ராதை அந்த வாசனையான கிருஹத்தில் வருந்திக் கொண்டிருக்கிறாள்.

த்வத பிஸரண ரபஸேன வலந்தீ
பததி பதானி கியந்தீ சலந்தீ (நாத)

உன்னை அடைவதற்கு, இழுக்கப்பட்டது போல் வேகமாக வரும் போது, சில அடிகள் நடந்ததும் விழுந்து விடுகிறாள்.

விஹித விஸதபிஸ கிஸலய வலயா
ஜீவதி ப்ரமிஹ தவ ரதிகலயா (நாத)

குளிர்ந்த தாமரைத் தண்டுகளாலான வளையல்கள் செய்து அணிந்து கொள்கிறாள்; உன்னுடனான பிரேமையாலேயே வாழ்ந்து வருகிறாள்

முஹுரவ லோகித மண்டன லீலா
மதுரிபுர ஹமிதி பாவன ஸீலா (நாத)

பார்த்து பார்த்து தன் ஆபரணங்களை உன்னுடையதைப் போலவே அமைத்துக் கொண்டு, ‘நானே கண்ணன்’ என்று உன்னைப் போல் பாவனை செய்கிறாள்

த்வரித முபைதி ந கதமபி ஸாரம்
ஹரிரிதி வததி ஸகீம் அனுவாரம் (நாத)

‘ஹரி ஏன் துரிதமாக நாங்கள் சந்திக்கும் இடத்துக்கு வந்து சேரவில்லை’ என்று பலமுறை தோழிகளிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.

ஸ்லிஷ்யதி சும்பதி ஜலதர கல்பம்
ஹரிருபகத இதி திமிரம் அனல்பம் (நாத)

‘ஹரி வந்து விட்டான்’ என்று நீருண்ட மேகத்தைப் போன்ற அத்தனை சிறியதாக இல்லாத ஒர் இருளை ஆலிங்கனம் செய்து கொள்கிறாள், முத்தமிடுகிறாள்

பவதி விளம்பினி விகளித லஜ்ஜா
விலபதி ரோதிதி வாஸக லஜ்ஜா (நாத)

தான் வசிக்கும் இடத்திலேயே உனக்காக அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருக்கிறாள்; உன்னால் தாமதமானதும் வெட்கத்தை விட்டு அழுகிறாள், புலம்புகிறாள்

ஸ்ரீ ஜயதேவ கவேரிதம் உதிதம்
ரஸிக ஜனம் தனுதாம் அதிமுதிதம் (நாத)

கவி ஜயதேவரால் இங்கனம் சொல்லப் பட்ட இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கட்டும்