கன்னி

எம்முள்

தொட முடியா
மூலையில்

விழி நாட்டி
கால் மாற்றாது

வெறித்த படி
நின்றிருக்கும்
தூய ஒருவள்

அங்கே

ஓய்வின்றி
அலை தழுவ

மணி ஒளிர
எதிர்நோக்கி
கல்லென
உறைந்திருக்கிறாள்